வந்தே பாரத் தொடக்க விழா.. மேடையில் ஒலித்த ஜெய் ஸ்ரீ ராம்.. எதிர்ப்பை பதிவு செய்த மம்தா பானர்ஜி
பிரதமர் நரேந்திர மோடி, வந்தே பாரத் விரைவு ரயிலை காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைத்த போதும் முதல்வர் மம்தா பானர்ஜி மற்ற அரசு அதிகாரிகளுடன் மேடைக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, வந்தே பாரத் விரைவு ரயிலை காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைத்த போதும் முதல்வர் மம்தா பானர்ஜி மற்ற அரசு அதிகாரிகளுடன் மேடைக்கு அருகில் ஒரு நாற்காலியில் அமர்ந்தார்.
வந்தே பாரத் தொடக்க விழாவில் ஜெய் ஸ்ரீ ராம் என பாரதிய ஜனதா தொண்டர்கள் கோஷமிட்ட நிலையில் மேடை ஏறாமல் அருகில் அமர்ந்த முதல்வர் மம்தா பானர்ஜி
2021ஆம் ஆண்டு விக்டோரியா நினைவு நிகழ்வின் மறுவடிவமைப்பில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை ஹவுரா நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திறப்பு விழாவின் போது "ஜெய் ஸ்ரீ ராம்" கோஷங்களுடன் வரவேற்கப்பட்டார்.
Advertisment
இந்த சம்பவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மற்ற பிஜேபி தலைவர்களை சங்கடத்திற்கு உள்ளாக்கிய நிலையில், பானர்ஜி மேடையில் ஏற மறுத்து, மற்ற அரசு அதிகாரிகளுடன் மேடைக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது தாயாரின் மறைவால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாததால் காணொலி வாயிலாக வந்தே பாரத் விரைவு ரயிலை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் சிவி ஆனந்த போஸ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, மத்திய அமைச்சர்கள் நிசித் பிரமானிக், ஜான் பர்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மம்தா பானர்ஜி மேடையை அடைந்ததும், மறுபுறம் இருந்த சில பாஜக ஆதரவாளர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என்று கோஷமிடத் தொடங்கினர். நிகழ்ச்சிக்கு வந்த பிறகு கவர்னர் போஸிடம் வளர்ச்சி குறித்து பானர்ஜி புகார் கூறியதைக் காணமுடிந்தது. முதலில் அந்த இடத்தை விட்டு வெளியேற நினைத்த பானர்ஜியை ரயில்வே அமைச்சர் சமாதானப்படுத்த முயன்றபோது, அவர் மேடையில் செல்ல மறுத்து மேடைக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
Advertisment
Advertisements
மமதா பானர்ஜியை சமாதானப்படுத்த முயன்ற ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ்
வந்தே பாரத் ரயிலை கொடியசைப்பதற்காக பிரமாண்ட திரையில் பிரதமர் நரேந்திர மோடி தோன்றியபோது, பானர்ஜி மீண்டும் அமைதி அடைந்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு ஆறுதல் கூறினார். “இன்று உங்களுக்கு தனிப்பட்ட முறையில் சோகமான நாள். இது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையின் மிகப்பெரிய இழப்பு. உங்கள் தாயை நேசிக்க கடவுள் உங்களுக்கு பலத்தையும், ஆசீர்வாதத்தையும் தருவாராக…உங்கள் அம்மாவின் சோகமான மறைவால் உங்களால் வரமுடியாமல் இங்கு வந்திருப்பதற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தயவு செய்து ஓய்வு எடுத்து பார்த்துக்கொள்ளுங்கள்” என்று பானர்ஜி கூறினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பேசிய பானர்ஜி, “இன்று எனது மகிழ்ச்சியான நாள். எனது கனவுத் திட்டமான ஜோகா டு தாரதாலா நிறைவேற்றப்படுகிறது. நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது தொடங்கிய மற்ற திட்டங்களும் துவக்கி வைக்கப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மாநிலத்திற்கு புதிய ரயில் ஒன்றையும் வழங்கியுள்ளீர்கள். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்… இதற்காக அனைத்து அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பிற அதிகாரிகளுக்கும் நன்றி. உங்கள் வேலையைச் செய்ய கடவுள் உங்களுக்கு வலிமையைத் தரட்டும். ” என்றார்.
அவரது உரையைத் தொடர்ந்து, பிரதமர் மோடி பச்சைக் கொடியை அசைத்து ரயில்களை திறந்து வைத்தார். பானர்ஜி, வைஷ்ணவ் மற்றும் பலர் பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்க பச்சைக் கொடியை அசைத்தனர்.
2021 ஆம் ஆண்டில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் விக்டோரியா நினைவிடத்தில் இதேபோன்ற ஜெய் ஸ்ரீராம் கோஷங்களுக்கு பானர்ஜி உட்பட்டார். அப்போது, நிகழ்ச்சியில் பேச மறுத்த பானர்ஜி, அரசு நிகழ்ச்சியில் இதுபோன்ற சம்பவத்தை கண்டித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/