வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை வெள்ளை நிறத்திலிருந்து காவி நிறமாக ரயில்வே வாரியம் மாற்றியுள்ளது.
Advertisment
நாடு முழுவதும் தற்போது 26 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் இந்த ரயில்கள் வெள்ளை மற்றும் நீலம் கலந்த வண்ணத்தில் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த வந்தே பாரத் ரயில்களை உலகப் பெற்ற சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை தயாரித்து வருகிறது. தற்போது இருக்கை வசதியுடன் வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், அடுத்ததாக படுக்கை வசதி கொண்ட ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இவற்றையும் சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையே தயாரிக்க உள்ளது.
இந்தநிலையில், வந்தே பாரத் ரயில்களில் நிறம் மாற்றம் செய்ய சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை நிர்வாகம் ஆலோசித்தது. ரயில்கள் எளிதில் அழுக்கடைவதை தடுக்க நிறம் மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ஆரஞ்ச் கலந்த க்ரே எனப்படும் காவி வண்ணம் ரயில் பெட்டிகளுக்கு ஏற்ற நிறமாக இருக்கும் என முடிவெடுக்கப்பட்டது. காவி வண்ணத்தில் மாற்றப்பட்ட புகைப்படங்கள் ரயில் பணிகளின் சமூக ஊடக பக்கங்களில் வலம் வந்தன.
இதனிடையே புதிய காவி வண்ணத்தில் இருக்கும் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பை, சென்னை ஐ.சி.எஃப்-பில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil