புதுச்சேரி பிரதேச ரசகுலத்தோர் நலச் சங்கம் சார்பில் கண்டன போராட்டம் புதுச்சேரி சட்டமன்றம் அருகே நடைபெற்றது. நலச் சங்கத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், வில்லியனூர், அரும்பார்த்தபுரம், பாகூர், உள்ளிட்ட பகுதிகளில் புதியதாக டோபிகானா அமைத்துக் கொடுக்க வேண்டும்.
வண்ணார் சமூகத்தினரை பட்டியலினப் பிரிவு பட்டியலில் இணைக்க வேண்டும். அதுவரை மிகவும் பிற்படுத்தப்பட்டியில் 5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மேலும், வண்ணார் சமூகத்தினருக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
தொடர்ந்து, போராட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தனர்.
இது குறித்து ஆறுமுகம் கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இலவச மனை பட்டா கேட்டு போராடி வருகிறோம்.
ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை. மேலும், பட்டியலின மக்கள் பிரிவில் வண்ணார் சமூகத்தினரை இணைக்கும் வரை பிற்படுத்தப்பட்ட பட்டியலில் 5% உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.
தொடர்ந்து, “இதற்கான உத்தரவை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலே அறிவிக்க வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/