Advertisment

வனவாசி vs ஆதிவாசி: வார்த்தைகளின் பொருளை வரையறை செய்த ராகுல் காந்தி

ஆர்.எஸ்.எஸ் விரும்பும் ‘வனவாசி’ என்ற வார்த்தை இந்த சமூகத்தை காடுகளுக்குள் கட்டுப்படுத்துகிறது என்று ராகுல் காந்தி கூறினார்.

author-image
WebDesk
New Update
Rahul vs Modi

வனவாசி vs ஆதிவாசி: வார்த்தைகளின் பொருளை வரையறை செய்த ராகுல் காந்தி

பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் ம.பி-யின் ஷாஹ்தோலில் பேசிய ராகுல் காந்தி ‘ஆதிவாசி’ என்ற வார்த்தை பயன்படுத்துவதை ஆதரித்தார். ஆர்.எஸ்.எஸ் விரும்பும் ‘வனவாசி’ என்ற வார்த்தை இந்த சமூகத்தை காடுகளுக்குள் கட்டுப்படுத்துகிறது என்று கூறினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Vanvasi vs Adivasi: At MP rally, Rahul again draws the line

மத்தியப் பிரதேசத்தின் ஷாஹ்தோல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பழங்குடியின சமூகத்தைக் குறிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி ‘வனவாசி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்தார்.

நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான காங்கிரஸின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்திய ராகுல், ஓ.பி.சி, தலித் மற்றும் பழங்குடியினரின் உண்மை நிலையை வெளிப்படுத்த நாட்டின் “எக்ஸ்ரே” படம் தேவை என்றார். 'ஆதிவாசி' என்பதற்குப் பதிலாக 'வனவாசி' என்ற வார்த்தையை முன்பு மோடி பயன்படுத்தியதையும் அவர் கேள்வி எழுப்பினார், அதற்குப் பதிலாக ஆதிவாசி என்ற் வார்த்தையைப் பயன்படுத்துமாறு பிரதமரை வலியுறுத்துவதாகக் கூறினார்.

“ஆதிவாசி, வனவாசி என்ற வார்த்தைகளுக்கு இடையே வித்தியாசம் உள்ளது. ஆதிவாசி என்றால் முதலில் இந்துஸ்தானுக்கு வருபவர்கள், இந்த நிலத்தின் உரிமையாளர்கள் என்று பொருள், வனவாசிகள் என்றால் காட்டில் வசிப்பவர்கள்” என்று ஷாஹ்தோலில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கூறினார்.   மேலும், “2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பட்டியல் பழங்குடியினர் கிட்டத்தட்ட பாதி மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர். “இப்போது, நரேந்திர மோடி பேசுவதைக் கேளுங்கள் - அவர் இனி வனவாசி என்று சொல்லவில்லை, ஆதிவாசி என்கிறார். ஆதிவாசி என்பது அவருடைய வாயிலிருந்து வரும் வார்த்தை, ஆனால், வனவாசி என்பது அவர் இதயத்தில் உள்ளது” என்று ராகுல் காந்தி கூறினார்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாட்டுக்குச் சென்றிருந்தபோது, பா.ஜ.க ‘வனவாசி’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்குப் பின்னால் ஒரு “வக்கிரமான தர்க்கம்” இருப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார். “நாம் ஆதிவாசி என்று சொல்கிறோம், மறுபக்கம் அவர்கள் ‘வனவாசி’ என்கிறார்கள். ‘வனவாசி’ என்ற வார்த்தைக்குப் பின்னால் ஒரு வக்கிரமான தர்க்கம் இருக்கிறது. நீங்கள் இந்தியாவின் உண்மையான உரிமையாளர்கள் என்பதை மறுத்து, அது உங்களைக் காட்டிற்குள் கட்டுப்படுத்துகிறது. ‘வனவாசி’யின் பின்னணியில் உள்ள திட்டம் என்னவென்றால், நீங்கள் காட்டை சேர்ந்தவர்கள், நீங்கள் ஒருபோதும் காட்டை விட்டு வெளியேறக்கூடாது. இது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் இந்த வார்த்தையை நாங்கள் ஏற்கவில்லை. இது உங்கள் வரலாறு மற்றும் உங்கள் பாரம்பரியத்தை சிதைக்கும் செயலாகும். இந்த நாட்டுடனான உங்கள் உறவின் மீதான தாக்குதல் இது” என்று ராகுல் காந்தி கூறினார்.

இருப்பினும்,  “'ஆதிவாசி' என்ற வார்த்தை நிலத்தின் உண்மையான உரிமையாளர்களைக் குறிப்பிடுகிறது. அவர்களுக்கு நிலம், காடுகள் மீது உரிமைகள் வழங்கப்பட வேண்டும், அவர்கள் விரும்பியதைச் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

‘ஆதிவாசி’ மற்றும்  ‘வனவாசி’ வார்த்தைககளின் தோற்றம்

பழங்குடியினரை விவரிக்க இந்திய அரசியலமைப்பு பட்டியல் பழங்குடியினர் அல்லது அனுசுசித் ஜன்ஜாதி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. பல பழங்குடியினர் தங்களை 'ஆதிவாசி' என்று குறிப்பிடுகின்றனர், அதாவது 'முதல் குடிமக்கள்'. இந்த வார்த்தை பொது சொற்பொழிவுகளில், ஆவணங்கள், உரை புத்தகங்கள் மற்றும் ஊடகங்களில் பயன்படுத்தப்படுகிறது.

'வனவாசி', அதாவது வனவாசிகள் என்பது, பழங்குடியினப் பகுதிகளில் பரவலாகப் பணிபுரியும், "கிறிஸ்தவ மிஷனரிகளின் பிடியில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக" கூறும் பா.ஜ.க-வின் கருத்தியல் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ஆல் பயன்படுத்தப்படும் வார்த்தை. ஒதுக்கப்பட்ட பழங்குடி சமூகம் பாரம்பரியமாக பிரதான சாதிக் கட்டமைப்பிற்கு வெளியே ஒரு அலகாகக் கருதப்படுவதால், அவர்களின் தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்த 'வனவாசி' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.

பழங்குடி சமூகங்களின் மாறிவரும் கலாச்சாரம் மற்றும் இந்து மதத்திலிருந்து அவர்கள் விலகியிருப்பதால் பீதியடைந்த ரமாகாந்த் கேசவ் தேஷ்பாண்டே, இரண்டாவது சர்சங்சாலக் எம்.எஸ் கோல்வால்கருடன் கலந்தாலோசித்து, 1952-ல் அகில பாரதிய வனவாசி கல்யாண் ஆசிரமத்தை நிறுவினார். பழங்குடியினரின் இந்துமயமாக்கல் - தேசிய ஒருமைப்பாட்டிற்கு அவசியம் என்று சங்கம் கூறியது - அவர்களின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாத்தல், சமூகத்தின் மத்தியில் ஆர்.எஸ்.எஸ் செயல்பாடுகள் எப்போதும் பா.ஜ.க-வுக்கு தேர்தல் ஆதாயங்களைப் பெற உதவியது.

“நாங்கள் அவர்களை வனவாசிகள் என்று அழைக்கிறோம். நாங்கள் அவர்களை ஆதிவாசிகள் என்று அழைப்பதில்லை, ஏனென்றால் ஆதிவாசி என்றால் உணமையான குடிமக்கள் அல்லது பழங்குடியினர், மற்றவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்று அர்த்தம். ஆனால், நாம் அனைவரும் இந்த கண்டத்தின் பூர்வீக குடிமக்கள் என்று ஆர்.எஸ்.எஸ் நம்புகிறது” என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராம் மாதவ் முன்னதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment