Vatican rejects Kerala nun Lucy Kalapura’s appeal against dismissal : கேரள கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர் கன்னியாஸ்திரி லூசி காளப்புரா. பாதிரியார் முல்லக்கல் மீது வைக்கப்பட்ட புகார்களை ஒட்டி அவரை கைது செய்ய வேண்டும் என்று போராடிய கன்னியாஸ்திரிகளில் அவரும் ஒருவர். மேலும் திருச்சபை ஊழியர்களின் தனி மனித சுதந்திரம் மற்றும் நீதிக்காக போராடிய அவரை சேவையில் இருந்து நீக்கி அறிவித்தது கத்தோலிக்க திருச்சபை. 53 வயதான லூசி இதனை எதிர்த்து கத்தோலிக்க திருச்சபை தலையகமான வாடிக்கனில் தன்னுடைய சேவை நீக்கத்திற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மேல் முறையீட்டினை வாடிகன் திருச்சபை நிராகரித்திருப்பதாக அந்த திருச்சபையின் இந்திய பிரதிநிதியகம் அவருக்கு பதில் அளித்துள்ளது. இதனை தொடர்ந்தும் நீங்கள் மேல் முறையீடு செய்ய விரும்பினால் செக்னாசுரா அபோஸ்டொலிகா எனப்படும் கத்தோலிக்க திருச்சபையின் உயர் தலைமையகத்தில் கோரிக்கை வைக்கலாம் என்று அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை அதிலும் இவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் அவர் இம்மதத்தின் உறுப்பினராகவே தொடர முடியுமே தவிர இறைப்பணியாற்ற இயலாது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இது குறித்து கன்னியாஸ்திரி குறிப்பிடுகையில் “ரோம் என்னுடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டது. ஆனால் இதனை இப்படியே விட்டுவிடப்போவதில்லை” என்று குறிப்பிட்டார். திருச்சபை தரப்பு கூறப்பட்ட போது “கன்னியாஸ்திரியின் நடவடிக்கை மத விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறது. ஆனால் அவரால் மேல்முறையீடு செய்ய இயலும்” என்று கூறியுள்ளது.