Advertisment

வரலாறு முக்கியமில்லையா? : பாடபுத்தகத்தில் மாற்றத்தால் மாணவர்கள் பரிதவிப்பு

ஆட்சிகள் மாறினால் காட்சிகள் மாறுவது இயற்கையே, ஆனால், ராஜஸ்தானிலோ வரலாறே மாற்றப்படுகிறது. இதனால் கஷ்டப்பட போவது மாணவர்களாகிய எதிர்கால தலைமுறையினர்தான் என்பது அவர்கள் அறிவது எப்போதோ..

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
veer savarkar bharata ratna , maharastra assembly Election 2019 , Modi Campaign

veer savarkar bharata ratna , maharastra assembly Election 2019 , Modi Campaign

வீர் பட்டத்தை இழந்த சாவர்க்கர், பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள், பயங்கரவாத அமைப்பாக இந்து மகா சபை உள்ளிட்ட மாற்றங்கள், ராஜஸ்தான் மாநில பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisment

ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற நிலையில், அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து சில மாதங்களுக்குள்ளாகவே, மாணவர்களின் பாடபுத்தகங்களில் இடம்பெற்றுள்ள வரலாற்று தகவல்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆட்சிகள் மாறினால் காட்சிகள் மாறுவது இயற்கையே, ஆனால், ராஜஸ்தானிலோ வரலாறே மாற்றப்படுகிறது. இதனால் கஷ்டப்பட போவது மாணவர்களாகிய எதிர்கால தலைமுறையினர்தான் என்பது அவர்கள் அறிவது எப்போதோ..

12ம் வகுப்பு வரலாற்று புத்தகம்

பழைய புத்தகம் : விடுதலை போராட்டத்தில் சாவர்க்கரின் பங்கு அளப்பரியது. அவரின் வீர தீர செயல்களினால், அவருக்கு வீர் பட்டம் வழங்கப்பட்டது.

மாற்றியமைக்கப்பட்ட புதிய புத்தகம் : விநாயக் தாமோதர் சாவர்க்கர் என்றே சாவர்க்கர் குறிப்பிடப்படுகிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் செல்லுலார் சிறையில் சாவர்க்கர் கொடுமைப்படுத்தப்பட்ட விதம். தன்னை விடுதலை செய்யக்கோரி, 1911, நவம்பர் 14ல் சாவர்க்கர் இரண்டாவதாக தாக்கல் செய்த கருணை மனுவில், தான் போர்ச்சுகலின் மகன் என்று குறிப்பிட்டிருந்தது. விடுதலை செய்யக்கோரி, சாவர்க்கர் 4 கருணை மனுக்களை பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அளித்திருந்தது.1942ம் ஆண்டில், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்த்தார். மகாத்மா காந்தியின் (1948) மரணத்திற்கு பிறகு, காந்தியை கொல்ல, சாவர்க்கர் கோட்சேவிற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு அரசியல் அறிவியல் புத்தகம்

பழைய புத்தகம் : பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பயங்கரவாத அமைப்புகளிடம் பணப்புழக்கம் குறைந்து,அவர்களது பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. வெளியுறவு கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன.

Casteism and Communalism பிரிவில், இஸ்லாமிய அமைப்புகளான ஜமாத் இ இஸ்லாம், சிமி உள்ளிட்ட அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளாக குறிப்பிடப்ட்டிருந்தன

புதிய புத்தகம் : பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்து தகவல்களும் நீக்கம்.

மக்களை பிரித்தாளும் அமைப்புகள் பட்டியலில், இந்து மகாசபையும் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய பாடபுத்தகங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் எல்லாம் நிபுணர்களின் ஆலோசனையின்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை. கடந்த பா.ஜ. ஆட்சியில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் புகழ் பாடுவது போன்றே மாணவர்களின் பாடங்கள் இருந்ததாக ராஜஸ்தான் கல்வித்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தொடசாரா கூறியுள்ளார்.

பா.ஜ. கண்டனம் : மக்களின் புரட்சிகளை எப்போதும் இழிவுபடுத்தும் நோக்கத்திலேயே காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது.வீர் சாவர்க்கர் போன்ற தலைவர்களின் வரலாற்றை அவர்கள் திட்டமிட்டு மறைக்க நினைத்தாலும், அவர்கள் உண்மையான வீரர்கள். அவர்களது புகழ் எப்போதும் மக்களின் மனங்களிலிருந்து மாறாது மறையாது என்று முன்னாள் கல்வித்துறை அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான வாசுதேவ் தேவ்னானி கூறியுள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment