நட்பாக பேசி பழகி பல பெண்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி நிர்வாணமாக வீடியோ காலில் வரச்சொல்லி அதை ரெக்கார்ட் செய்து சமூக வலைதளங்களில் அனுப்பி மிரட்டி பணம் பறித்த வேலூரைச் சேர்ந்த நபரை புதுச்சேரி இணையவழி போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் ஆர்வமாக இருக்கின்றார். குறிப்பாக சமூக வலைதளமான ஷேர் சாட் என்ற செயலியை பயன்படுத்தி வருகிறார். அவருடைய ஷேர் சாட் ஐடியை பயன்படுத்தி ஒரு குரூப்பில் இணைந்துள்ளார். அந்த குரூப்பில் மற்றவர்களுடன் மெசேஜ் அனுப்புவது வீடியோ ஷேர் செய்வது. அதைத் தொடர்ந்து அந்த குரூப்பில் இருந்து அவருக்கு முகம் தெரியாத நபர் அறிமுகம் ஆகியுள்ளார்.
பின்னர் இருவரும் தங்களது whatsapp எண்ணை பகிர்ந்துள்ளனர். வாட்ஸ் அப் மூலம் பேசி பழகி உள்ளனர். முதலில் அந்த நபர் சகோதரி என்று பேசி உள்ளார். அவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார் பின்னர் காதலிப்பதாக கூறி அவரை ஆடை இல்லாமல் வீடியோ கால் செய்யும்படி கூறியுள்ளார். அவர் மீது உள்ள நம்பிக்கையில் அந்தப் பெண்ணும் ஆடை இல்லாமல் வீடியோக்கள் செய்துள்ளார். அந்த நிர்வாண வீடியோ காலை ரெக்கார்ட் செய்து வைத்துக் கொண்டு புகார்தாரரான அந்தப் பெண்ணிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அந்தப் பெண்ணும் அவரின் மிரட்டலுக்கு பயந்து ரூபாய் 6000 அனுப்பியுள்ளார். மேலும் அவர் பணம் கேட்டு மிரட்டி உள்ளார் மற்றும் புகார்தாரரான அந்தப் பெண்ணையும் அவரின் குடும்ப நபர்களையும் மிக மிக ஆபாசமாக பேசிய ஆடியோவை வாட்ஸ்அப் மூலம் இவருக்கு அனுப்பி உள்ளார்.
மேற்கண்ட அந்தப் பெண் கொடுத்த புகார் சம்பந்தமாக புதுச்சேரி இணைய வழி போலீசார் வழக்கு பதிவு செய்து கடந்த ஒரு சில நாட்களாக மேற்கண்ட பெண்ணுக்கு அவரின் வீடியோ கால் ரெக்கார்டிங்கை whatsapp மூலம் அனுப்பி மிரட்டி வந்த நபரை பற்றி விசாரித்து தேடி வந்தனர் தற்பொழுது இணைய வழி காவல் நிலையத்தில் இருக்கின்ற நவீன மென்பொருளை பயன்படுத்தி sharechat மற்றும் whatsapp மூலமாக அந்த வீடியோவை அனுப்பியது யார் என்று இணைவழி போலீசார் கண்டுபிடித்தனர். மேற்படி வாட்ஸ் அப்பில் பயன்படுத்திய மொபைல் எண்ணை வைத்து போலீசார் அது வேலூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதுநிலை காவல் கண்காணிப்பாளர் திரு. கலைவாணன் IPS அவர்களின் உத்தரவுப்படி ஆய்வாளர்கள் தியாகராஜன், B.C. கீர்த்தி தலைமையில் தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது.
தனிப்பட்டையில் தலைமை காவலர் மணிமொழி, மற்றும் காவலர்கள் அரவிந்தன் , ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று நண்பகலில் வேலூர் விரைந்தனர். வீடியோ அனுப்பி இவரின் முழு விவரங்கள் தனிப்படை போலீசாருக்கு தெரியவரவே நேற்று நண்பகலில் அவரை மேலூரில் கைது செய்து புதுச்சேரி இணைய வழி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரிக்கும் போது மற்ற அனைத்து விவரங்களும் போலீசாருக்கு தெரியவந்தது.
அந்த பெண்ணிற்கு ஆடை இல்லாமல் வீடியோ கால் ரெக்கார்டிங் - ஐ அனுப்பி மிரட்டியது சம்பந்தமாக மேற்படி நபரை கைது செய்து இன்று மாலை தலைமை குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்படி சுரேஷ்குமார் மொபைலை ஆய்வு செய்தபோது அவர் பல்வேறு பெண்களுக்கு இது போல, 2022-ம் ஆண்டிலிருந்து பல்வேறு பெண்களை ஆடை இல்லாமல் வீடியோ கால் வரச்சொல்லி அதனை ரெக்கார்ட் செய்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அப்படி அவர் கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் வாட்ஸ் அப் மூலம் அவர்களை மிக மிக ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டி தொந்தரவு செய்தது மற்றும் அவரின் வங்கி கணக்கை ஆராய்ந்து பார்க்கும் பொழுது இது போன்று பல பெண்களிடம் பணப்பரிவர்த்தனை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும். மேற்படி நபரின் மீது தேனி மற்றும் திருச்சியில் புகார் இருப்பது தெரியவந்துள்ளது. இது பற்றி இணையவழி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பொதுமக்களுக்கும் இளம்பெண்களுக்கும் எச்சரிக்கை செய்வது என்னவென்றால் சமூக வலைதளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழக வேண்டாம். உங்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஏதேனும் மிரட்டல் வந்தால் உடனடியாக உங்கள் பெற்றோரிடமோ அல்லது காவல்துறைக்கோ அல்லது உங்கள் நம்பிக்கைக்குரியவர்களுக்கு உடனடியாக தெரியப்படுத்தவும். 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு இணைய வழி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.