scorecardresearch

எதிர்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வெங்கையா முடிவு; செயலக மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

சர்வாதிகார மனப்பான்மை மற்றும் அரசாங்கத்தின் ஜனநாயகமற்ற நடவடிக்கைகள் இவை என்று மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்

எதிர்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வெங்கையா முடிவு; செயலக மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

Venkaiah considers action against unruly Opposition : இந்த ஆண்டின் மழைக்கால கூட்டத் தொடர் புதன் கிழமை அன்று குழப்பமான நிகழ்வுகளுக்கு மத்தியில் கசப்பான குறிப்புடன் நிறைவடைந்த நிலையில், அன்று மாநிலங்களவையின் “வெல்” என்று அறியப்படும் பகுதியில் கட்டுக்கடங்காமல் செயல்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநிலங்களவை தலைவர் எம். வெங்கையா பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

செயலகத்தின் முன்னாள் மற்றும் சேவை செய்யும் மூத்த உறுப்பினர்களுடன் சட்டரீதியான ஆலோசனைகளை நடத்தி, எம்.பி.க்களின் நடத்தை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார் வெங்கையா என்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கைகளை பரிந்துரை செய்ய கமிட்டி ஒன்று உருவாக்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. நெறிமுறைகளை அடிப்படையாக கொண்டு ஒரு கமிட்டி உருவாக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு உறுப்பினர் அல்லது கவுன்சில் அல்லது அதன் கமிட்டியின் சலுகை மீறல் தொடர்பான பிரச்சினைகளை ஆராய முடியும் என்றாலும், நெறிமுறைகள் குழு உறுப்பினர்களின் தார்மீக மற்றும் நெறிமுறை நடத்தை குறித்தும், உறுப்பினர்களின் நெறிமுறை மற்றும் பிற முறைகேடுகளைக் குறிப்பிடும் வழக்குகளையும் மேற்பார்வையிடும்.

இந்த விஷயத்தை ஆய்வு செய்ய ஒரு சிறப்பு குழுவை உருவாக்குவதற்கான ஒரு முடிவும் அவருக்கு முன்னாள் உள்ளது. இதற்கு முன்பு காங்கிரஸ் தலைமையிலான UPA-1 அரசில் இப்படி ஒரு குழு உருவாக்கப்பட்டது. இதனை அன்றைய மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜீ உருவாக்கினார். பவன் குமார் பன்சால் தலைமையிலான சிறப்பு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், மக்களவை அதன் 10 உறுப்பினர்களை வெளியேற்ற தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த விவகாரம் ப்ரிவிலேஜ் குழுவுக்கு அனுப்பப்படாமலே உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். அதே குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் சபையால் வெளியேற்றப்பட்டார்.

அக்டோபர் 2007 முதல் செப்டம்பர் 2012 வரையில் மாநிலங்களவை செயலாளராக பணியாற்றிய வி.கே. அக்னிஹோத்ரியிடம், இது தொடர்பாக ஆலோசனைகள் வழங்க வெங்கையா பேசியுள்ளார். அதே போன்று மாநிலங்களவை செயலகத்தின் முன்னாள் உறுப்பினர்களுடனும் அவர் பேசியுள்ளார்.

டிசம்பர் 1983 முதல் ஆகஸ்ட் 1990 வரை மக்களவை பொதுச்செயலாளராக பணியாற்றிய சுபாஷ் காஷ்யப்பை ஆலோசிக்க அவர் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் உரையாடிய வெங்கையா, எதிர்க்கட்சி மற்றும் ட்ரெஷரி அமர்வுகள் இரண்டும் அவருடைய இரண்டு கண்கள் என்றும் அவருக்கு சமம் என்றும் கூறினார்.

ஒரு சரியான பார்வை, இரண்டு கண்களால் சாத்தியம் என்றும், அவர் இரு பக்கங்களுக்கும் சமமான மரியாதை அளிப்பவர் என்றும் கூறினார். மேலும், அவர், பல சந்தர்ப்பங்களில், சபையின் சுமுகமான செயல்பாட்டை செயல்படுத்துவது இரு தரப்பினரின் கூட்டுப் பொறுப்பாகும் என்று கூறுகிறார் என்பதையும் நினைவு கூறினார்.

சபையில் தனது நடவடிக்கைகளை கையாள்வதில் யாரேனும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தாலும் அவர்களின் அறிவுக்கு அதனை விட்டுவிடுவார். சட்டமன்றம் விவாதம் மற்றும் கலந்துரையாடலுக்கானது என்றும், வெளி அரசியல் சண்டைகளை மேஜைக்கு கொண்டு வரக்கூடாது என்று சில உறுப்பினர்கள் மேஜையில் மீது ஏறி கோஷங்களை எழுப்பியதை சுட்டிக் காட்டினார்.

மாநிலங்களவையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட உறுப்பினர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுங்கள் என்று அவைத் தலைவர் வெங்கையாவிடம் அறிவித்ததாக, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ப்ரல்ஹாத் ஜோஷி, வியாழக்கிழமை அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசு சபை நடவடிக்கைகளை தடம் புரண்டதாக குற்றம் சாட்டினர். மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாயுடுவுக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதினார், அவர் “சர்வாதிகார மனப்பான்மை மற்றும் அரசாங்கத்தின் ஜனநாயகமற்ற நடவடிக்கைகள்” என்று கூறினார். எதிர்க்கட்சித் தலைவர்கள் குழுவினர் நாயுடுவை சந்தித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Venkaiah considers action against unruly opposition mps seeks advice