/tamil-ie/media/media_files/uploads/2020/09/image-25-1.jpg)
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
துணை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இது குறித்த அறிவிப்பு வெளியாகியது. ட்விட்டரில், " இன்று காலை வழக்கமான கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இந்தியாவின் துணை ஜனாதிபதிக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. இருப்பினும், நோய்த் தொற்று அறிகுறிகள் எதுவும் இல்லை. உடல் நலம் சீராக உள்ளது. மருத்துவர்களின் ஆலோசனைப்படி அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் தம்மை தனிமைப்படுத்திக் கொள்ளவுள்ளார். அவரது மனைவி உஷா நாயுடுவுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்துள்ளது " என்று பதிவு செய்யப்பட்டது.
The Vice President of India who underwent a routine COVID-19 test today morning has been tested positive. He is however, asymptomatic and in good health. He has been advised home quarantine. His wife Smt. Usha Naidu has been tested negative and is in self-isolation.
— Vice President of India (@VPSecretariat) September 29, 2020
கடந்த 14-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கொரோனா தொற்று அச்சம் காரணமாக செப் 23 அன்று முடிவடைந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.