Advertisment

கேரள மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் சென்னையில் மரணம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரான கொடியேறி பாலகிருஷ்ணன், வி.எஸ். அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை (போலீஸ்) அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

author-image
WebDesk
Oct 01, 2022 21:22 IST
Veteran CPM leader Kodiyeri Balakrishnan passes away

மார்க்சிஸ்ட் மூத்தத் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார்.

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினரும், கட்சியின் முன்னாள் மாநில செயலாளருமான கொடியேறி பாலகிருஷ்ணன் சென்னையில் காலமானார்.

கேரளத்தின் மூத்த அரசியல்வாதியான கொடியேறி பாலகிருஷ்ணனுக்கு ஆகஸ்ட் மாதம் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து கட்சியின் மாநில செயலாளர் பதவியை துறந்தார். தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில் இன்று (ஆக.1 சனிக்கிழமை) சிகிச்சை பலனின்றி காலமானார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரான கொடியேறி பாலகிருஷ்ணன், வி.எஸ். அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை (போலீஸ்) அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

அதாவது, 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை மாநிலத்தின் உள்துறை அமைச்சராக செயல்பட்டார். தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு கட்சியின் மாநில செயலாளராக பொறுப்பு ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Cpm #Kerala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment