Advertisment

திருப்பதி லட்டு விவகாரம்: அரசு கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வலியுறுத்தி வி.ஹெச்.பி பிரச்சாரம்

அரசு கட்டுப்பாட்டில் கோயில்கள் இருப்பது முஸ்லிம் படையெடுப்பாளர்கள் மற்றும் காலனித்துவ ஆங்கிலேயர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்று வி.ஹெச்.பி கூறியது.

author-image
WebDesk
New Update
Tirupati1

திருப்பதி பாலாஜி கோயில் லட்டு பிரசாதம் குறித்த சர்ச்சைக்கு மத்தியில், நாடு முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை விடுவிக்க வலியுறுத்தி வி.ஹெச்.பி செவ்வாய்க்கிழமை பிரச்சாரத்தை  அறிவித்தது.

Advertisment

அரசின் கட்டுப்பாட்டில் கோயில்களில் ஊழல் நடப்பதாக குற்றஞ்சாட்டிய வி.ஹெச்.பி அரசு கட்டுப்பாட்டில் கோயில்கள் இருப்பது முஸ்லிம் படையெடுப்பாளர்கள் மற்றும் காலனித்துவ ஆங்கிலேயர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்று கூறியது.

வி.ஹெச்.பி  இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், அரசு கோயில் செல்வங்களை கொள்ளையடிக்கிறது. ஆட்சியில் இடம் பெற முடியாத அரசியல்வாதிகளுக்கு இடமளிக்க கோயில்களை பயன்படுத்துகின்றன என்று கூறியது. 

பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்படுவது "ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தையும் கோபப்படுத்தியது" என்று ஜெயின் கூறினார். இது போன்ற முறைகேடு சம்பவங்கள் கேரளாவின் சபரிமலை உள்பட பல கோவில்களில் இருந்து வருகிறது. "இந்து சமுதாயத்தின் உணர்வுகளை காயப்படுத்துவதாகும்"  என்றார். 

எனவே, கோவில்களை அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து மக்களிடம் வழங்க வேண்டும். இதுவே பிரச்சனைக்கான ஒரே நிலையான தீர்வு  என்றார். கோயில்களை அரசு நடத்துவது "அரசியலமைப்புக்கு எதிரானது" என்று ஜெயின்  குறிப்பிட்டார். "அரசுக்கு மதம் இல்லை என்று பிரிவு 12 கூறுகிறது. அப்படியானால், இவர்களுக்கு கோவில்களை நடத்தும் உரிமையை யார் கொடுத்தது? என்றார். 

மேலும் கூறிய அவர்,  முன்பு முஸ்லீம் படையெடுப்பாளர்கள் கோவில்களை அழித்து கொள்ளையடித்தனர். அதே சமயம் ஆங்கிலேயர்கள் புத்திசாலியானவர்கள். அவர்கள் கோவில்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர். இதன் மூலம் கோவில்களை கொள்ளையடிக்க ஒரு நிறுவன அமைப்பை நிறுவினர். 

துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரம் கிடைத்த போதிலும், நமது அரசியல்வாதிகளால் இந்தக் காலனித்துவ மனநிலையிலிருந்து தங்களை விடுவிக்க முடியவில்லை என்றார். 

ஆங்கிலத்தில் படிக்க:    VHP launches campaign: ‘Govt control on temples mindset of Muslim invaders & Britishers’

தொடர்ந்து, தமிழக அரசின் கீழ் மட்டும் 400க்கும் மேற்பட்ட கோயில்கள் இருப்பதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இந்த கோயில்களில்  50,000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும்  ஜெயின் குற்றம்சாட்டினார். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment