“நம்முடைய ‘காப்’ கலாச்சாரத்தைப் பாருங்கள், காப் பின்புலத்தில் செல்லுங்கள். காப் சாதகமானது என்பதை நீங்கள் காண்பீர்கள். ஓரிரு சம்பவங்கள் மூலம் அதை மதிப்பிட முடியாது” என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Khap is our culture, don’t assess it on isolated incidents: Dhankhar
ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாருடன் சனிக்கிழமை ஃபரிதாபாத்தில் உள்ள சூரஜ்குண்ட் கண்காட்சியில் பங்கேற்றனர்.
குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “காப் நமது பண்பாடு மற்றும் நமது நாகரிகத்தின் ஆழமான சின்னம்” என்றும், சில தனிப்பட்ட சம்பவங்களின் அடிப்படையில் அதை மதிப்பிட முடியாது என்றும் சனிக்கிழமை கூறினார்.
“நம்முடைய கலாச்சாரத்தைப் பாருங்கள், காப் பின்புலத்தில் செல்லுங்கள். காப் சாதகமானது என்பதை நீங்கள் காண்பீர்கள். ஓரிரு சம்பவங்கள் மூலம் அதை மதிப்பிட முடியாது” என்று ஜக்தீப் தன்கர் கூறினார்.
ஃபரிதாபாத்தில் உள்ள சூரஜ்குண்ட் கண்காட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘வியக்கத்தக்க 9 ஆண்டு ஹரியானா அரசு: புதிய இந்தியாவின் எழுச்சி மற்றும் துடிப்பான ஹரியானா’ என்ற புத்தகத்தை வெளியிட்டு ஜக்தீப் தன்கர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கு தன்னை அழைத்தபோது, அவருக்கு புத்தகத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாது என்று துணை ஜனாதிபதி கூறினார். “ஆனால், அரசு விவகாரங்களின் நிலை, மாற்றம் என்ன என்பதை நான் அறிந்தேன், அது புத்தகத்தில் இருக்கும் என்று எனக்குத் தெரியும்” என்று ஜக்தீப் தன்கர் கூறினார்.
ஹரியானா முதல்வருடனான தனது உறவு குறித்து பேசிய அவர், “மனோகர் லால் கட்டாருடனான எனது உறவு நீண்டது மற்றும் ஆழமானது. ஹரியானாவில் அவர் செய்தது எளிதான வேலை அல்ல. அனைத்தும் மாநிலத்துக்காக, அனைத்தும் மக்களுக்காக, தனக்காக எதுவுமில்லை என்பதே அவரது குறிக்கோள்.” என்று கூறினார்.
நாட்டின் நிலை குறித்து பேசிய அவர், “பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா இரண்டு விஷயங்களுக்கு பெயர் பெற்றது - மோசடிகள் மற்றும் உலகின் பலவீனமான பொருளாதாரத்தின் பிம்பம். எவ்வளவு தூரம் வந்துவிட்டோம் என்று பாருங்கள். இன்று நாம் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார சக்தியாக இருக்கிறோம். கனடா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை நாம் பின்தள்ளியுள்ளோம், அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில், ஜப்பான் மற்றும் ஜெர்மனியை விஞ்சி இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். ஊழல் வளர்ச்சியை திண்ணுகிறது என்று அர்த்தம். தகுதி ஆட்சிக்கு ஊழல் அறமில்லாதது” என்று தன்கர் கூறினார். மேலும், 2047-ல், நாம் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, இந்தியா வளர்ச்சியடைந்து, உலக அளவில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்று கூறினார்.
கடந்த 9 ஆண்டுகளில் ஹரியானா மக்கள் கண்டுள்ள வளர்ச்சி மாற்றங்கள் குறித்து ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த நீடித்த வளர்ச்சியின் காரணமாக, வருங்கால சந்ததியினர் இந்த மாற்றத்தை எப்போதும் போற்றுவார்கள் என்றார். ஹரியானா இப்போது நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்றும், ‘ஹரியானா ஏக்-ஹரியான்வி ஏக்’ என்ற கொள்கையின் மூலம் வழிநடத்தப்படும் சமத்துவ வளர்ச்சி, ஊழலற்ற நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பே இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என்றும் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா கூறினார்.
இந்த கூட்டத்தில் பேசிய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், அரசியல், கல்வி, சமூகப் பணி, நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய துறைகளில் பல்வேறு பதவிகளை வகிக்கும் தனிநபர்களின் கண்ணோட்டங்களை இந்த புத்தகம் உள்ளடக்கியதாக கூறினார். தனது 9 ஆண்டுகால பதவிக்காலத்தை நினைவுகூர்ந்த அவர், அரசாங்கம் நல்லாட்சி மற்றும் அந்தியோதயா கொள்கைகளால் வழிநடத்தப்படுவதாகவும், மாநிலத்தில் இருக்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சித்துள்ளேன் என்றும் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.