Hamza Khan
Victim sought police cover, pointed to threats after his arrest and bail: உதய்பூரைச் சேர்ந்த கன்ஹையா லால் தனது தையல் கடைக்குள் வெட்டிக் கொல்லப்படுவதற்கு ஏறக்குறைய மூன்று வாரங்களுக்கு முன்பு, மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். மேலும் கன்ஹையா லால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கொலை மிரட்டல்களைக் காரணம் காட்டி போலீஸ் பாதுகாப்பைக் கோரியிருந்தார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜி ஹவா சிங் குமாரியா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், "ஜூன் 10 அன்று கன்ஹையா லால் கைது செய்யப்பட்டார், அடுத்த நாள் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்" என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: சிவசேனா எம்.எல்.ஏ.,க்களின் அதிருப்திக்கு காரணம் என்.சி.பி; ஏன்?
மேலும், “பின்னர், ஜூன் 15 ஆம் தேதி, கன்ஹையா லால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக எழுத்துப்பூர்வ புகாரை அளித்து, போலீஸ் பாதுகாப்பு கோரினார். சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி, மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நபர்களை காவல் நிலையத்துக்கு அழைத்தார். பின்னர், இரு சமூகத்தைச் சேர்ந்த 5-7 பொறுப்புள்ள நபர்கள் அமர்ந்து உடன்பாடு எட்டினர். இனிமேல் யார் மீதும் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்று கையால் எழுதப்பட்ட குறிப்பில் கன்ஹையா லால் கூறியுள்ளார். எனவே, பாதுகாப்பு அச்சுறுத்தலின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் ஏடிஜி ஹவா சிங் குமாரியா கூறினார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/06/Mohammad-Riyaz-Ghouse-Mohammad-from-Udaipur.jpg)
கன்ஹையா லால் கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்த, உதய்பூரில் உள்ள தன்மண்டி காவல் நிலையத்தில், உதய்பூரைச் சேர்ந்த நஜிம் அகமது என்பவர் அளித்த புகாரின் பேரில் எஃப்ஐஆர் IPC பிரிவுகள் 295 A (மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள்) மற்றும் 153 A (குழுக்களுக்கு இடையே பகையை ஊக்குவித்தல் மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைத்தல்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
புகாரில் கன்ஹையா லால் நபிக்கு எதிராக "அவதூறான கருத்தை" கூறியதாக குற்றம் சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
ஜூன் 15 ஆம் தேதி கன்ஹையா லால் காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில், அஹ்மத் கடந்த மூன்று நாட்களாக தனது கடையினை நோட்டமிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், "நான் எனது கடையைத் திறந்தவுடன் அவர்கள் என்னைக் கொல்ல முயற்சிப்பார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்," என்றும் கன்ஹையா லால் கூறியிருந்தார்.
மேலும், "அவர்கள் எனது பெயரையும் புகைப்படத்தையும் தங்கள் சமூகத்தின் குழுவில் வைரலாக்கியுள்ளனர், மேலும் யாராவது என்னை எங்கும் கண்டால், நான் ஆட்சேபனைக்குரிய கருத்தைப் பதிவிட்டதால் நான் கொல்லப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்" என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கன்ஹையா லால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை தன்மண்டி காவல் நிலைய நிலைய அதிகாரி கோவிந்த் சிங் உறுதிப்படுத்தினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil