ஓடிசா மாநிலம் பாலஷோரில் கடந்த வாரம் நிகழ்ந்த ரயில் விபத்து நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில், எஸ்எம்விடி உள்ளிட்ட ரயில்கள் சிக்கின. இதில் 275 பேர் உயிரிழந்தனர், 1000க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். நாட்டை உலுக்கிய இந்த விபத்தில் கடைசி நொடி வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
Advertisment
இந்த வீடியோ ஒடியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. வீடியோவில் தூய்மைப் பணியாளர் ஒருவர் ரயிலில் உள்ள பெட்டிகளை தூய்மை செய்துவருகிறார். சீட்டில் பயணிகள் படித்து தூங்குகின்றனர். சிலர் ஸ்மார்ட்போன் பயன்படுத்திக் கொண்டு உள்ளனர். இந்த நிலையில் நொடிப் பொழுதினில் விபத்து நடந்து வீடியோ அணைகிறது.
ஒடிசா ரயில் விபத்து சிபிஐ உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்து நடந்த பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பலர் ஆய்வு நடத்தினர். இந்த விபத்துக்கு சிக்னலில் ஏற்பட்ட மாற்றம்தான் காரணம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பபட்டு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“