இந்தியாவில் முதியவர்கள் மீதான கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடக்க முடியாத தாயை மாடிக்கு அழைத்துச் சென்று தள்ளிவிட்டு கொலை செய்ததாக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அச்சம்பவத்தின் சிசிடிவி வீடியோ, இன்னும் மனிதம் இருக்கிறதா என கேட்கும் வகையில் இருந்தது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம், பேர்லி மாவட்டத்தில் மூதாட்டியை ஒருவர் சரமாரியாக சாலையில் வைத்து தாக்கும் வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.
அந்த வீடியோவில், மூதாட்டியை ஒரு நபர் கீழே தள்ளிவிட்டு உதைக்கிறார். சிசிடிவி வீடியோவின் மூலம் அச்சம்பவம் 7-ஆம் தேதி நிகழ்ந்திருக்கலாம் என தெரியவருகிறது. மூதாட்டி மற்றும் அவரை தாக்கும் நபர் இருவரும் யார் என்பது தெரிய வரவில்லை. இரவு நேரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதில், மேலும் ஆச்சரியத்தையும் வேதனையையும் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், அவ்வழியாக வாகனங்களில் செல்பவர்கள், மூதாட்டி தாக்கப்படுவதை தடுத்து நிறுத்தாமல், வேடிக்கை பார்த்துவிட்டு சென்றதுதான்.
#WATCH: An old woman thrashed by a man in Bareilly, Police say,' video footage is being examined and accused will be identified.Once he is identified, we will arrest him' pic.twitter.com/wnnLdIISn0
— ANI UP (@ANINewsUP) 10 February 2018
சிசிடிவி வீடியோவை சோதனை செய்துவருவதாகவும், மூதாட்டியை தாக்கிய நபர் விரைவில் அடையாளம் காணப்படுவார் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Video man brutally thrashes old woman on streets of bareilly
இன்னும் மூன்று நாள் டைம் கொடுங்கள் – பிக் பாஸ் சோம் ரசிகர்களிடம் வேண்டுகோள்
இலங்கைக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி மருந்து: இந்தியா வழங்குகிறது
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் டெல்லிக்குள் செல்லலாம்!
எஸ்ஏசி-க்கு விஜய் பகிரங்க நோட்டீஸ்: ‘எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது’
ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை
Tamil News Today Live : என் மனதின் குரலை பேச வரவில்லை, உங்கள் குரலை கேட்க வந்தேன் – ராகுல் காந்தி