Advertisment

சொகுசு விமானத்தில் சித்த ராமையா; வைரலான வீடியோ

அந்த வீடியோவில், சித்தராமையா வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா உள்ளிட்டோருடன் காணப்படுகிறார்.

author-image
WebDesk
New Update
Siddaramaiah in ultra-luxury jet goes viral

கர்நாடகா முதல் அமைச்சர் சித்த ராமையாவின் நவீன சொகுசு விமானம் வைரலாகிவருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

karnataka | siddharamaiah | கர்நாடகா முதல் அமைச்சர் சித்தராமையா மற்றும் அவரது அமைச்சரவை சகாவான BZ ஜமீர் அகமது கான் தனியார் ஜெட் விமானத்தில் செல்வது போன்ற வீடியோ வைரலாக பரவியது.

இதனை எதிர்க்கட்சியான பாஜக விமர்சித்துள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள சித்த ராமையா, “பிரதமர் நரேந்திர மோடி எந்த விமானத்தில் பயணிக்கிறார், ஏன் தனியாக செல்கிறார் எனக் கேட்டுள்ளார்.

Advertisment

அந்த வீடியோவில், சித்தராமையா வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா உள்ளிட்டோருடன் காணப்படுகிறார்.

அமைச்சர் கான் ஜெட் விமானத்தின் உள்ளே ‘தேகோ தேகோ தேகோ சல்தா ஹை சுல்தான், தேகோ தேகோ தேகோ லால்கர் ஹை சுல்தான்’ என்ற பின்னணி பாடலுடன் நடந்து செல்கிறார்.

இது குறித்து மாவட்ட பாஜக தலைவர் விஜயேந்திரா தனது ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில், “விவசாயிகள் பயிர்கள் நஷ்டம், மழையில்லாமல், எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறாமல் மிக மோசமான நெருக்கடியை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சித்த ராமையா மற்றும் அமைச்சர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ்கின்றனர்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆங்கிலத்தில் வாசிக்க : Video of Karnataka CM Siddaramaiah in ultra-luxury jet goes viral, draws sharp reaction from BJP

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Karnataka siddharamaiah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment