லைசனஸும் இல்லாமலும், ஹெல்மேட் இல்லாமலும் வண்டி ஓட்டிய பெண் ஒருவர் ட்ராபிக் போலீசை சரமாரியாக திட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
ட்ராபிக் போலீஸ்:
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பிரதான சாலையில் 24 வயது பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் கடந்த வியாக்கிழமை அன்று சென்றார். அப்போது அவரை ட்ராபிக் போலீசார் இருவர் வழிமறித்துள்ளனர். பின்பு அவரிடம் ஹெல்மெட் அணியாமல் வந்ததிற்காக ஃபைன் கட்டுமாறு கூறியுள்ளனர்.
ஆனால் இதைப் பொருட்படுத்தாமல் அந்த பெண் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார் தன்னால் ஹெல்மேட் அணிய முடியாது என்றும், உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் என்று போலீசாரையே மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் இருந்து வண்டியின் சாவியைபிடிங்கி வைத்தனர்.
பின்பு அந்த பெண்ணிடம் லைசன்ஸை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர்.அப்போது தான் அந்த பெண் லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்ட்டியது தெரிய வந்துள்ளது. இதைப் பற்றி அந்த பெண்னிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அந்த பெண் “நான் லைசன்ஸ் இல்லாமல் தான் வண்டி ஓட்டுவேன் என்றும் உங்களால் என்ன செய்ய முடியும்? என்று மிரட்டல் தோனியில் பேசியுள்ளனர்.
இந்த காட்சிகள் அனைத்தும் தற்போது வீடியோவாக சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் அந்த பெண் மீது, ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டியது, தவறான சாலையில் வந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின கீழ் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதே போல், மிரட்டல் விடுத்த பெண்ணிடம் கடமையுடன் நடந்த ட்ராபிக் போலீசார் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.