ராஜஸ்தான் மாநிலத்தில், பிபிலாந்திரி என்ற கிராமம் ஒரு பெண் குழந்தை பிறந்த உடனே 111 மரங்கன்றுகளை நடும் பழக்கத்தை கடைப்பிடித்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், பிபிலாந்திரி என்ற கிராமம் ஒரு பெண் குழந்தை பிறந்த உடனே 111 மரங்கன்றுகளை நடும் பழக்கத்தை கடைப்பிடித்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறது.
முன்பெல்லாம் பெண் குழந்தை பிறந்தாலே துக்கம், செலவு, என நினைத்த காலங்கள் மாறி தற்போது பெண் குழந்தை தான் வேண்டும் என்றும் பெற்றோர்கள் ஏங்கும் காலம் வந்துவிட்டது. படிப்பு, வேலை, கல்யாணம் என அனைத்திலும் தற்போது பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், பெண் குழந்தையின் வரவை கொண்டாடும் வகையில் ராஜஸ்தானில் உள்ள பிபிலாந்திரி கிராமம் பெண் குழந்தைகளின் பிறப்பை வரவேற்கும் வகையில் “மரம் நடும் விழா” என்ற விநோத பழக்கத்தை கைப்பிடித்து வருகிறது.
பெண் குழந்தை என்றால் கர்ப்பத்திலேயே கலைப்பதும், அதையும் மீறி பிறக்கும் குழந்தைகள் சிசு கொலை செய்யப்படுவது என தாங்கிக் கொள்ள முடியாத செயல்களை தடுக்கும் வகையில் இந்த மரம் நடும் விழாவை கிராமத்தின் தலைவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும், அந்த ஊரில் உள்ள எல்லோரும் சேர்ந்து 111 மரக் கன்றுகளை நடவேண்டும். எல்லாமே பணம் தரும் வேம்பு, ரோஸ்வுட், மா, நெல்லி மற்றும் மூலிகை மரங்கள் மட்டுமே. இந்த மரங்களை அந்த கிராமத்து பெண்கள் பராமரிக்க வேண்டும். அதற்கான சம்பளத்தை கிராம பஞ்சாயத்து கொடுக்கும். அந்த குழந்தை வளர்ந்து ஆளாகும் போது மரங்களால் வரும் வருமானம் அந்த பெண் குழந்தையின் திருமண செலவுகளுக்கு உதவும்.
பெண் குழந்தைகள் பிறந்தவுடன் பஞ்சாயத்திலிருந்து 21 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள். பெற்றோர் தரப்பிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். இந்த மொத்தப் பணத்தையும், பிறந்த குழந்தையின் பெயரில் பிக்ஸட் டெபாசிட்டில் போட்டு விடுகிறார்கள்.
இதுவும் அந்தக் குழந்தைக்கு 18 அல்லது 20 வயதாகும்போது, அந்தக் குழந்தையின் படிப்பு மற்றும் கல்யாண செலவிற்கு உதவுகிறது. இந்த விநோத பழக்கத்தை கேள்விப்பட்ட பலரும் இந்த கிராமத்தில் வந்து செட்டில் ஆகிவிடுகின்றனராம்.
அதே போல், கர்பமாக இருக்கும் பல பெண்களும் தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்றும் கடவுளிடம் பல வகைகளில் பிராத்தனை செய்துக் கொள்கின்றனர். பெண் பிள்ளைகளை தேவதை போல் பார்க்கும் இந்த கிராமம் பல அரசியல் தலைவர்களாலும் பாராட்டப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.