/tamil-ie/media/media_files/uploads/2017/11/manushi-chhillar-winning-moment-759.jpg)
உலகில் உள்ள அனைவரின் மனதையும் கொள்ளையடித்த மனுஷி சில்லார், 17 ஆண்டுகள் கழித்து இந்தியாவிலிருந்து உலக அழகி பட்டத்தை வென்றிருப்பவர். 21 வயதாகும் மனுஷி சில்லார் மருத்துவ மாணவியாவார். ஹரியானாவை சேர்ந்த மனுஷி சில்லார், கடந்த 2017-ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தையும் பெற்று, உலக அழகிப்போட்டியில் விருது ஒன்றையும் பெற்றிருக்கிறார்.
இந்தியா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், கென்யா, மெக்ஸிகோ என 5 நாடுகளை சேர்ந்த பெண்கள் உலக அழகிப்போட்டியின் இறுதி போட்டியாளர்களாவார். இங்கிலாந்தின் ஸ்டீஃபானி ஹில் இரண்டாம் இடத்தையும், மெக்ஸிகோவின் ஆண்ட்ரியா மீஸா மூன்றாம் இடத்தையும் பெற்றார். 2016-ஆம் ஆண்டின் உலக அழகியான போர்ட்டோரிகா (Puerto Rico) நாட்டின் மாடல் அழகி ஸ்டெஃபானி டால் வாலஸ் டியாஸ், மனுஷி சில்லாருக்கு கிரீடத்தை சூடினார். அப்போது, உணர்ச்சிப்பூர்வமாக காட்சியளித்த மனுஷி சில்லாரின் அற்புத தருணங்கள் இதோ:
இறுதிப்போட்டியில் மனுஷி சில்லாரிடம் கேட்கப்பட்ட கேள்வி: உங்களை பொறுத்தவரை அதிக சம்பளம் தரப்படுவதற்கு தகுதியான வேலை எது?”
பதில்: ”அம்மாவுக்கு பெரும் மரியாதையை அளிக்க வேண்டும் என நினைக்கிறேன். நீங்கள் சம்பளம் குறித்து கேட்கிறீர்கள். ஆனால், அது எப்போதும் பணமாக இருக்க வேண்டும் என்பது கிடையாது. ஆனால், அது நீங்கள் தரும் அன்பு மற்றும் மரியாதையாகவும் இருக்கலாம். என் வாழ்க்கையில் என்னுடைய அம்மா பெரும் உந்துதலாக எப்போதும் இருந்திருக்கிறார். எல்லா அம்மாக்களும் தங்கள் குழந்தைகளுக்காக பலவற்றை தியாகம் செய்திருக்கின்றனர். அதனால், அம்மாக்களுக்குத்தான் அதிக சம்பளம் தர வேண்டும் என நான் நினைக்கிறேன்”.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.