தண்ணீரின் சக்தியை எவராலும் தடுக்க முடியாது: தெருவில் நின்ற காரை பல அடி தூரம் தூக்கிய வீசிய வீடியோ!

கார் தூக்கி எறியப்பட்டதை கண்ட பொதுமக்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து ஓடினர்

மும்பையில்  குடிநீர் குழாய் உடைந்தலில் திடீரென்று  வெளிவந்த தண்ணீர்,  ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை பல அடி தூரம் தூக்கி அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

சிறுவயதில் எல்லோருக்கும் ஒரு கேள்வி எழுவதுண்டு. காற்று, நீர், நெருப்பு இதில் எவற்றிற்கு சக்தி அதிகம்?  இதற்கான பதில் வளரும் காலங்களில் நமக்கே தெரிந்து விடும். அதிகப்படியான மழை, அதிகப்படியான வெயில், சக்தி வாய்ந்த நிலநடுக்கம்,  அசூர தனமான  சூறாவளி என எது தனியாக தாக்கினாலும் நம்மால்  தாங்க முடியாது.

இயற்கையின், இந்த சக்தியை யவரலாலும் கணிக்கவும் முடியாது, அதை தடுக்கவும் முடியாது. இதை நிரூப்பிக்கும் வகையில்,மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள போரிவாலி பகுதியில் ஒரு  நிகழ்வு நடந்துள்ளது.

அந்த பகுதியில் இருக்கும்,  குடிநீர் குழாய் ஒன்றில் விரிசல் ஏற்பட்டு சில நாட்களாக தொடர்ந்து தண்ணீர் கசிந்து வந்துள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு,  குழாயில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு, அதிகப்படியான தண்ணீர் வெளியேர தொடங்கியது. இதனால்,  தெரு முழுவதும்  தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்க ஆரம்பித்துள்ளது.

அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார்,  பல அடி தூரம் தூக்கி எறியப்பட்டது.சீறி பாய்ந்து வந்த தண்ணீர் காரை வானத்தை எட்டும் அளவிற்கு தூக்கி எறிந்தது. கார் தூக்கி எறியப்பட்டதை கண்ட பொதுமக்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து ஓடினர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Water Pipeline Burst Causes Sewerage Overflow In Mumbai

Water Pipeline Burst Causes Sewerage Overflow In Mumbai

Posted by Indian Express on 28 मार्च 2018

 

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close