scorecardresearch

பிரதமருக்கு எதிரான வீடியோக்கள்; சென்னை யூடியூபர் மிஸ்ரா ’மாற்றுக்கருத்துடைய முதியவர்’ – குடும்பத்தினர்

Videos against PM, Adityanath: Chennai YouTuber ‘just opinionated old man’, says family: பிரதமர், யோகி ஆதித்யநாத்க்கு எதிரான வீடியோக்கள்; சென்னையில் கைது செய்யப்பட்ட மிஸ்ரா, மாற்றுக்கருத்துடைய முதியவர் என அவரது குடும்பத்தினர் கருத்து

சென்னையின் மாதவரத்தில், 62 வயதான யூடியூபர் கடந்த வாரம் அவரது வீடியோக்களால் கைது செய்யப்பட்டதிலிருந்து மன்மோகன் மிஸ்ராவைச் சுற்றியுள்ள சலசலப்பு அடங்கவில்லை.

மிஸ்ராவைப் பற்றி, “எப்பொழுதும் குங்குமம் அணிந்திருப்பார்” என்று பக்கத்து வீட்டுக்காரர் கூறினார். “அவர் இங்கே (பதஞ்சலி பாபா ராம்தேவ்) ராம்தேவ்வின் மனிதர்,” என்று ஒருவர் கூறினார், ஒருவர் பதஞ்சலி தயாரிப்புகளுடன் மிஸ்ராவின் தொடர்பைக் குறிப்பிடுகிறார். “குறைவாக பேசக்கூடியவர். அமைதியானவர்”, என்று மற்றொருவர் கூறினார், மேலும், “ இரவில் தவிர, அவர் தனது வீடியோக்களை படம்பிடிக்கும்போது. அவர் ஒரு பொது பேச்சாளர் போல … உரத்த உரைகளைச் செய்கிறார் என்றும் கூறினார்.

மிஸ்ராவுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை, சிபிசிஐடி அதிகாரி உள்பட 10 போலீசாரின் குழு உத்தரபிரதேசத்தில் இருந்து வந்து, அவரை கைது செய்தனர். கொரோனா தொற்றுநோய் தொடர்பாக தவறான அறிக்கைகள் மற்றும் அவரது வீடியோக்கள் மூலம் பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மிஸ்ராவின் பெரும்பாலான வீடியோக்கள், அவரது செல்போனில் படமாக்கப்பட்டவை, பிரதமர் நரேந்திர மோடி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் மற்றும் மத்திய பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராக வீடியோ வெளியிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், ஜான்பூரில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரிகள், பிரதமர் மோடி மற்றும் மற்றவர்களுக்கு எதிரான அவரது அறிக்கைகள் பற்றி எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்படவில்லை என்றும், அவருக்கு எதிரான வழக்கு ஐபிசி பிரிவு 505 (பொது குறும்பு தொடர்பான அறிக்கைகள்), தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தொற்றுநோய் நோய்கள் சட்டம் என்றும் அவர்கள் கூறினார்.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட கொத்வாலி காவல்நிலையத்தின் SHO, சஞ்சீவ் மிஸ்ரா, “மூன்றாவது வீடியோவில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் குறைந்தது மூன்று பேர் இறந்துவிடுவார்கள், மற்றும் இந்தியாவில் சுமார் 54 கோடி மக்கள் இறப்பார்கள் என்று அவர் தனது வீடியோக்களில் கூறுகிறார். இவை அனைத்தும் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியது. என்று கூறினார்.

மிஸ்ரா தமிழகத்தில் வசிக்கும் போது ஜான்பூர் காவல்துறை ஏன் இந்த விஷயத்தை கவனித்தது என்று கேட்டதற்கு, அந்த அதிகாரி 62 வயதான மிஸ்ரா ஜான்பூரின் நிரந்தர வசிப்பாளர் (ஜான்பூரைச் சேர்ந்தவர்) என்று கூறினார்.

மிஸ்ரா 35 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தாலும், தமிழ் சரளமாக பேசத் தெரிந்திருந்தாலும், யூடியூப்பில் அவரது வீடியோக்கள், பெரும்பாலும் இந்தியில் தான். அவருக்கு 695 சந்தாதாரர்கள் உள்ளனர்.

பெயர் வெளியிட விரும்பாத மிஸ்ராவின் உறவினர், அவர் பான் கார்டுகள் மற்றும் பிற அரசு சேவைகளுக்கு விண்ணப்பிக்க மக்களுக்கு உதவும் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார். “ஆனால் இந்த சேவைகளில் பல ஆன்லைன் சேவைகளுக்கு மாறிய பிறகு, அவர் தனது வியாபாரத்தை நிறுத்தினார்,” என்று கூறினார்.

மிஸ்ரா பின்னர் பாரத் ஸ்வாபிமான் என்ற அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார், இது சுதேசி தயாரிப்புகளை ஊக்குவிக்கிறது, குறிப்பாக பதஞ்சலி ஆயுர்வேதம், இது அவருக்கு அந்த பகுதியில் “ராம்தேவின் மனிதர்” என்ற பெயரைப் பெற்று தந்தது.

மிஸ்ரா சென்னையில் பணிபுரியும் இந்தி பேசும் தொழிலாளர்களுக்கான முகவராகவும் பணியாற்றினார் என்று ஒரு தமிழ்நாடு போலீஸ் அதிகாரி கூறினார்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் திங்கள்கிழமை மாலை மிஸ்ராவின் வீட்டிற்குச் சென்றபோது, ​​அவரது மனைவி மாயா, மிஸ்ராவை ஜாமீனில் எடுக்க அவரது மகன் மனோஜ் உத்திர பிரதேசம் சென்றுள்ளதாக கூறினார். குற்றம் சாட்டப்பட்ட மிஸ்ரா இப்போது ஜான்பூருக்கு போக்குவரத்து காவலில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மிஸ்ராவை “தேசபக்தர்” மற்றும் “தீவிர தேசியவாதி” என்று அழைத்த உறவினர், “அவர் மோடியின் ஆதரவாளராக இருந்தார் … அரசியல் ரீதியாக, அவர் எந்தக் குழுவுடனும் இணைக்கப்படவில்லை. இந்த நாட்களில் நீங்கள் பார்க்கும் பலரைப் போலவே அவரும் அவர்களின் கருத்துக்களைப் பற்றி மிகவும் வெளிப்படையாக இருக்கிறார். அவர் மாற்று கருத்துடைய முதியவர் … ஒரு பிரச்சனையாளர் அல்ல. ஒரு கருத்தை ஒளிபரப்பியதற்காக எத்தனை பேரை நீங்கள் கைது செய்வீர்கள், ”என்று மிஸ்ராவின் உறவினர் கூறினார், மேலும், அவருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்ததாகவும், கடந்த ஆண்டு அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதிலிருந்து பெரும்பாலும் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

“அவருக்கு இதய பிரச்சினைகள் உள்ளன. கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் உச்சத்தில், அவருக்கு தெரிந்த பலர் உத்திரபிரதேசத்தில் இறந்தனர், அதன் பிறகு அவருக்கு பல பீதி தாக்குதல்கள் இருந்தன. அவரை காப்பாற்ற நீதிமன்றத்தையும் அரசாங்கத்தையும் நாடி விளக்கம் அளிப்போம் என்று நம்புகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஒரு வயதானவர், ”என்று உறவினர் மேலும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Videos against pm adityanath chennai youtuber just opinionated old man says family