கான்பூர் விவகாரம் : “ஜெய் ஸ்ரீ ராம்” கூற வற்புறுத்திய கும்பல்; அப்பாவை விடுமாறு கதறி அழுத 5 வயது மகள்

5 வயது குழந்தை தன்னுடைய அப்பாவை விடுமாறு கெஞ்சி கேட்டும் அகமதை தொடர்ந்து தாக்கியுள்ளது அந்த கும்பல்

Asad Rehman 

man made to chant Jai Shri Ram : புதன்கிழமை கான்பூரில் 34 வயதான அஃப்சர் அகமது என்ற நபரை ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற வற்புறுத்திய வீடியோவில் அவருடைய 5 வயது மகள், அவரை விடுமாறு கேட்டு அழும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.

வெளியான வீடியோக்கள் ஒன்றில், காவி நிற துண்டுகள் அணிந்திருந்த சிலர், இ-ரிக்‌ஷா ஓட்டும் அஃப்சர் அகமது நாட்டுக்கு எதிராக “ஆன்ட்டி – நேசனல்” முழக்கங்களை எழுப்பியதாக கூறி துன்புறுத்தியுள்ளனர். தான் அவ்வாறு கூறவில்லை என்று அவர் தொடர்ந்து கெஞ்சும் காட்சிகளும், அவருடைய ஐந்து வயது குழந்தை அவரை விட்டுவிட வேண்டும் என்று கெஞ்சும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. அவரையும் அவருடைய மகளையும் அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றி காவல் நிலையத்திற்கு காவலர்கள் அழைத்து சென்றனர்.

வியாழக்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக கான்பூர் காவல்துறை பாண்டு வாலா என்ற அஜய் ராஜேஷ், அமன் குப்தா மற்றும் ராகுல் குமார் ஆகியோரை கைது செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று கான்பூர் காவல்துறை ஆணையர் அசிம் குமார் அருண் கூறினார். இந்நிலையில் சில பஜ்ரங் தாள் அமைப்பை சேர்ந்தவர்கள் கான்பூரில் உள்ள டி.சி.பி (தெற்கு) அலுவலகத்தின் முன்பு மூன்று பேர் கைதுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அகமது ஒரு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளோம். தாக்குதல் மற்றும் கலவரம் தொடர்பான பிரிவுகளின் கீழ் சில உள்ளூர்வாசிகளை நாங்கள் பெயரிட்டுள்ளோம். என்று, தாக்குதல் நடந்த சேரியில் வசிக்கும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கிடையில் ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த தகராறோடு புதன்கிழமை நடந்த சம்பவத்தை இணைத்து, ஏசிபி (கோவிந்த்நகர்) விகாஸ் பாண்டே கூறினார்.

அகமது அளித்த புகாரில் 5 நபர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். 10 பேர் அடையாளம் தெரியவில்லை. ஒரு சிலர் தன்னை புதன்கிழமை தாக்க துவங்கியதாகவும், இந்த இடத்தில் இருந்து நான் உடனே வெளியேற வேண்டும். இல்லை என்றால் என்னையும், என்னுடைய குடும்பத்தினரையும் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினார்கள். காவல்துறையினர் என்னை பத்திரமாக மீட்டனர் என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார் அவர். IPC பிரிவுகள் 147 (கலவரம்), 323 (தானாக முன்வந்து தாக்குதலில் ஈடுபடுதல்), 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) மற்றும் 506 (மிரட்டல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் கமிஷனர் அருண், முந்தைய தகராறில், இரு தரப்பிலும் புகார்கள் வந்ததை தொடர்ந்து அவர்கள் வழக்கு பதிவு செய்தனர். வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் பின்னர் காணப்பட்டன.

இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் தங்கள் சார்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி, சர்ச்சையில் ஈடுபட்ட குடும்பங்களில் ஒருவரை சந்திக்க வந்தனர். அவர்கள் அங்கு இருந்தபோது, சில உள்ளூர்வாசிகள் மற்ற குடும்பத்துடன் தொடர்புடைய ஒருவரைப் பிடித்து அவரை அடித்தனர். அவர் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டார், இப்போது அவர் நலமாக இருக்கிறார் என்று ஏசிபி கூறினார். விஎச்பி மற்றும் பஜ்ரங் தளம் புதன்கிழமை அந்தப் பகுதியில் போராட்டம் நடத்தியதாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினார்.

கான்பூர் டிசிபி (தெற்கு) ரவீணா தியாகி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 12ம் தேதி அன்று, தங்களின் வீட்டுக்கு அருகே இருக்கும் ஒரு தம்பதியினர் குறித்து புகார் ஒன்றை அளித்தார். பிரிவு 354 இன் கீழ் துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார் (உள்நோக்கத்துடன் ஒரு பெண் மீது தாக்குதல் அல்லது குற்றவியல் நடவடிக்கை அவளுடைய அடக்கத்தை சீர்குலைக்க). “அந்த பெண்ணின் மகன்களுக்கு எதிராக எதிர்-எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது” என்று தியாகி கூறினார்.

விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு பெண், தனது மதத்தை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Videos show man made to chant jai shri ram kid cried to let him go

Next Story
பினராயி விஜயன் பணக் கட்டை யுஏஇக்கு எடுத்துச் சென்றதாக குற்றச்சாட்டு – சுங்கத்துறைPinarayi Vijayan, Kerala CM Pinarayi Vijayan, Kerala, Gold Smuggling, பினராயி விஜயன், தங்கக் கடத்தல், கேரளா, யுஏஇ, சுங்கத்துறை, Customs, Pinarayi Vijayan a bundle of foreign currency to UAE, UAE, Kerala, Customs statement, Swapna, sivasankaran
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com