தன்னுடைய சொத்துகளை விற்று கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கேட்கும் விஜய் மல்லைய்யா

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டப்படி மல்லைய்யாவின் சொத்துக்களை முடக்க மத்திய அரசு முடிவு

By: Updated: June 30, 2018, 06:01:23 PM

அமலாக்கத்துறை விஜய் மல்லைய்யாவினை, தப்பியோடிய பொருளாதார குற்றாவாளியாக அறிவித்தது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்திய சிறப்பு நீதிமன்றம் இந்த அறிவிப்பினை வெளியிட்டது. மதுபான தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கும் விஜய் மல்லைய்யா இந்திய வங்கிகளில் வாங்கியிருக்கும் கடன் 12,500 கோடி ரூபாய் ஆகும்.

அந்த கடனை திருப்பிச் செலுத்த இயலாமல் தலை மறைவாக இருந்து வருகின்றார் விஜய் மல்லைய்யா. இந்நிலையில் அமலாக்கத்துறை, விஜய் மல்லைய்யா வாங்கிய கடன் தொகைக்காக அவரின் சொத்துக்களை முடக்க மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரியது.

இதனை விசாரித்த நீதிமன்றம், அவருடைய சொத்துக்களை முடக்க உத்தரவிட்டது. மேலும் இது போன்ற நடவடிக்கைகளால் மட்டுமே வங்கி மோசடியை தவிர்க்க இயலும் என்றும் கூறியிருக்கின்றது.

இதனை அறிந்த கிங்பிஃஷர் நிறுவனத்தின் நிர்வாகிகள், கடந்த 22ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கின்றது. அதன்படி நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகள் அனைத்தையும் விற்று கடனை அடைப்பதற்காக கால அவகாசம் வேண்டும் என்று கூறப்பட்டிருக்கின்றது. வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்கள் முதற்கொண்டு அனைத்தையும் திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாக அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அரசு அளிக்கும் தகவல் படி, கிங்ஃபிஷ்ர் நிறுவனத்தின், 17 வங்கிகளில் ரூபாய் 9,990 கோடி கடன் நிலுவையில் இருக்கின்றது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Vijay mallya summoned by pmla court on august 27 under new fugitive ordinance

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X