விகாஸ் துபே இறப்பிற்கு முன்பு நடந்தவை : சரணடைய மறுத்த நிலையில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு
Vikas Dubey encounter news : இந்த விபத்தை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட துபே, விரைந்து செயல்பட்டு அங்குள்ள போலீசாரிடமிருந்து துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், கடந்த வாரத்தில் 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே, வெள்ளிக்கிழமை காலை, போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Advertisment
8 பேரை சுட்டுக்கொன்ற நிலையில், ரவுடி விகாஸ் துபே தலைமைறைவு ஆனார். போலீசார், அவரைபற்றிய தகவல் தருபவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூலை 9ம் தேதி மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் துபே கைது செய்யப்பட்டார்.
கான்பூர் போலீஸ் துணை எஸ்.பி, டாக்டர் அனில்குமார் தலைமையிலான போலீஸ் டீம், உத்தரபிரதேசத்தின் சிறப்பு அதிரடி படை மற்றும் கான்பூர் போலீஸ் உதவியுடன் சாலைமார்க்கமாக, துபேயை, கான்பூர் கொண்டு சென்று கொண்டிருந்தனர். ஜூலை 10ம் தேதி காலை 7 மணியளவில், இவர்கள் வந்த கார் சாசேந்தி அருகே வளைவில் திரும்பும் போது, வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது
இந்த விபத்தை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட துபே, விரைந்து செயல்பட்டு அங்குள்ள போலீசாரிடமிருந்து துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பிக்க முயன்றார்.
பின் வந்த போலீசார் சுதாரித்து, துபேயை சுற்றி வளைத்தனர். போலீசார் சரணடைய வலியுறுத்திய நிலையில் விகாஸ் துபே, போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த தாக்குதலில் 2 போலீசார் காயமடைந்தனர். போலீசார் பதிலுக்கு சுட்டதில் துபே குண்டு பாய்ந்து காயமடைந்தார்.
பின் துபே மற்றும் 2 போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, துபே மரணமடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்ததாக போலீஸ் எஸ்.பி அனில் குமார் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil