விக்ரம் லேன்டர் ஹார்ட்லேண்டிங் மூலம் தான் தரையிறங்கியது – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எனவே, தற்போது தான் பாரளுமன்றத்தில் அமைச்சர் அதிகாரப்போர்வமாக விக்ரம் லேன்டர்  ஹார்ட்லேண்டிங் மூலம் தரையிறங்கியுள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.  

By: Updated: November 21, 2019, 02:50:43 PM

சந்திராயன் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட, அதனுடைய 48வது நாளில் லாண்டர் விக்ரம் நிலவில் தரையிறங்குமாறு வடிவமைக்கப்பட்டது. நிலவில் தரையிறங்க சரியாக இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும் போது லேண்டர் விக்ரம் சிக்னல்களை இழந்தது.

இரண்டரை மாதங்களுக்குப் பிறகு தற்போது தான் லேன்டர் விக்ரம் ஹார்ட் லேண்டிங் மூலம் தரையிறங்கியது என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டிருக்கிறது இஸ்ரோ.

மக்களவையில் விண்வெளித் துறை அமைச்சகத்திடம் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இணைஅமைச்சர் ஜிதேந்திர சிங் இதுகுறித்து பதில அளிக்கையில், ” நிலவில் தரை இறங்கும் தருவாயில் விக்ரம் லேன்டர் வேகைத்தை குறைப்பதற்கான இஸ்ரோ வடிவமைக்கப்பட்ட அளவை விட விக்ரம் லேன்டர் அதிக வேகத்தில் பயணித்தது. அதன் விளைவாக, நியமிக்கப்பட்ட  தரையிரங்கும் இடத்திலிருந்து  500 மீட்டருக்குள் ஹார்ட் லேண்டிங் முறையில் விக்ரம் லேன்டர் தரையிறங்கியது ” என்றும் தெரிவித்தார்.

 

பெடஸ்டிரியன் ப்ளாசா எப்படி இருக்கு? சென்னைவாசிகளின் கருத்து?


 

செப்டம்பர் 7ம் தேதியன்று இஸ்ரோ சிவன் செய்தயாளர்களிடம்,”விக்ரமின் தரை இறக்கும் திட்டம் நிலவிலிருந்து 2.1 கி.மீ உயரத்தில் வரை நல்ல முறையில் காணப்பட்டது. இதற்குப் பிறகு தான்,லேண்டரிலிருந்து பெங்களூரில் இருக்கும் மிஷன் ஆபரேஷன்ஸ் காம்ப்ளக்ஸ் எந்த தகவலும் வரவில்லை. கடைசியாய் வந்த டேட்டாக்களை பகுப்பாய்வு செய்வோம்” என்றார்

செப்டம்பர் 10ம் தேதியன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ,”நிலவை சுற்றிவரும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் விண்கலம் மூலம் விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்டது. லேண்டர் விக்ரமுடன் தொடர்பு கொள்ளும் எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறோம்”  என்று பதிவு செய்திருந்தது.

 

செப்டம்பர் 17- ம் தேதி, இஸ்ரோவின் ட்வீட் சற்று வெளிப்படையாகவும், விக்ரம் லேன்டர் ஹார்ட் லேண்டிங் மூலம் தான் இறங்கியுள்ளது இஸ்ரோ தனது ட்விட்டரில் மறைமுகமாக சொல்வது போல் சொல்லியது.

எனவே, தற்போது தான் பாரளுமன்றத்தில் அமைச்சர் அதிகாரப்போர்வமாக விக்ரம் லேன்டர்  ஹார்ட்லேண்டிங் மூலம் தரையிறங்கியுள்ளது என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Vikram lander made a hard landing ministry statement in the parliament

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X