ஆண்ட்ரியா ஹெவிட் அளித்துள்ள புகாரில், தனது கனவர் வினோத் காம்ப்ளி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டிய தாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த சம்பவம் பாந்த்ராவில் உள்ள வினோத் காம்ப்ளியின் வீட்டில் நடந்துள்ளது என்றும் அவர் சமையல் பாத்திரத்தின் கைப்பிடியை தன் மீது வீசியதால் தலையில் காயம் ஏற்பட்டதாக ஆண்ட்ரியா குற்றம் சாட்டியுள்ளார் என்று பாந்த்ரா காவல் நிலைய அதிகாரி கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காயம் அடைந்த வினோத் காம்ப்ளியின் மனைவி ஆண்ட்ரியா மருத்துவ பரிசோதனைக்காக பாபா மருத்துவமனைக்கு சென்றார்.
அவரது புகாரின் அடிப்படையில், பாந்த்ரா போலீஸார் வெள்ளிக்கிழமை காம்ப்லிக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 324 (அபாயகரமான ஆயுதங்களால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு) ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்தனர்.
வினோத் காம்ப்ளி மனைவி ஆண்ட்ரியா அளித்த புகாரின் அடிப்படையில், பாந்த்ரா போலீஸார் வெள்ளிக்கிழமை காம்ப்ளிக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 324 (அபாயகரமான ஆயுதங்களால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) 504 (கண்ணியத்தை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"