Advertisment

லண்டன் இந்திய தூதரக வன்முறை: 15 பேரை அடையாளம் கண்ட என்.ஐ.ஏ

லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் முன்பு வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 45 பேரில் 15 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Violence at Indian High Commission in London

லண்டன் வன்முறை தொடர்பாக விசாரணையை தொடங்கிய என்.ஐ.ஏ ஏப்ரல் மாதம், லண்டன் போராட்டங்கள் தொடர்பாக, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் சுட்டிக் காட்டியது.

india | london: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்த மார்ச் 19-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். பஞ்சாபில் பிரிவினைவாதி அம்ரித் பால் சிங்கு-க்கு எதிரான காவல் துறை நடவடிக்கையை கண்டித்து இந்தப் போராட்டம் நடந்தது. அப்போது தூதரகத்தில் பறந்த தேசியக் கொடியை போராட்டக்காரர்கள் கீழே இறக்கி அவமரியாதை செய்தனர். தூதரகத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 2 அதிகாரிகள் காயம் அடைந்தனர்.

Advertisment

இந்த சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரியை அழைத்து எதிர்ப்பை பதிவு செய்தது. இதையடுத்து, இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்வதாக இங்கிலாந்து அரசு உறுதி அளித்தது.

இந்த சம்பவம் குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. இதன் பேரில் சம்பவத்தின்போது இருந்த தூதரக அதிகாரி அளித்த புகாரின் பேரில் கடந்த மார்ச் 23-ம்தேதி டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை டெல்லி காவல் துறை பரிந்துரையின் பேரில் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ)  வசம் உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது.

 என்.ஐ.ஏ விசாரணை 

இதனையடுத்து, விசாரணையை தொடங்கிய என்.ஐ.ஏ ஏப்ரல் மாதம், லண்டன் போராட்டங்கள் தொடர்பாக, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு பயங்கரவாதத் தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் சுட்டிக் காட்டியது. அது தொடர்பாக புதிய வழக்குப் பதிவு செய்யுமாறு என்.ஐ.ஏ.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

மே மாதம், என்.ஐ.ஏ இங்கிலாந்து சென்று ஆதாரங்களை சேகரித்தது. இந்தியா திரும்பியதும், அவர்கள் சம்பவத்தின் 5 வீடியோக்களை வெளியிட்டனர். தூதரகத்தை சேதப்படுத்த முயன்ற சந்தேக நபர்களை அடையாளம் காண உதவுமாறு பொது மக்களைக் கேட்டுக்கொண்டனர். மொத்தமாக  500க்கும் மேற்பட்ட அழைப்புகள்  என்.ஐ.ஏ-வுக்கு வந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

15 பேர் அடையாளம் 

இந்த நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் முன்பு வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 45 பேரில் 15 பேரை அடையாளம் கண்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் (LOC) வெளியிட தயார் செய்தும் வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், என்.ஐ.ஏ விசாரணைக் குழுவிற்கு ஆர்.அன்ட்.ஏ.டபிள்யூ  ஏஜென்சி (R&AW) உதவியதாகவும் கூறினார். தகவல்கள் மற்றும் பிற ஏஜென்சிகளின் கிரவுட் சோர்சிங் உதவியுடன், என்.ஐ.ஏ தாக்குதல் நடத்திய 15 நபர்களை அடையாளம் கண்டுள்ளது. அவர்களை அடையாளம் கண்ட பிறகு, விரைவில் அவர்களுக்கு எதிராக எல்.ஓ.சி-யை வெளியிடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்" என்று ஒரு அதிகாரி கூறினார்.

இது தொடர்பான வளர்ச்சியில், ஜூலை 2 அன்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை குறிவைத்ததாகக் கூறப்படும் நான்கு காலிஸ்தான் ஆதரவாளர்களையும் என்.ஐ.ஏ அடையாளம் கண்டுள்ளது. இந்தியர் மீதான காலிஸ்தான் தாக்குதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, மற்றொரு என்.ஐ.ஏ  குழு அடுத்த மாதம் கனடாவுக்குச் செல்ல உள்ளது.

லண்டன் வன்முறை தொடர்பாக என்.ஐ.ஏ 15 பேரை அடையாளம் கண்டுள்ள நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து அரசை வற்புறுத்துவது அடுத்த சவாலாக இருக்கும். ஏனெனில் இந்தியாவின் UAPA (இந்த வழக்கில் என்.ஐ.ஏ எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது) போன்ற சட்டம் இங்கிலாந்தில் இல்லை. அதனால் போராட்டக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.  

எஃப்.ஐ.ஆரில், புகார்தாரர் கிரண் குமார் வசந்த் போசலே, இந்திய தூதரக உதவி பணியாளர்கள் மற்றும் நல அலுவலர், அவதார் சிங் என்கிற கண்டா, குர்சரண் சிங் மற்றும் ஜஸ்விர் சிங் ஆகியோரை இந்த வழக்கில் முதன்மை குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். "கண்டா ஜூன் மாதம் பர்மிங்காமில் இறந்தார். மேலும் அவரது வழக்கு பதிவுக்காக அவரது இறப்புச் சான்றிதழைப் பெற என்.ஐ.ஏ சம்பந்தப்பட்ட துறையுடன் தொடர்பு கொண்டுள்ளது" என்று ஒரு அதிகாரி கூறினார்.

என்.ஐ.ஏ தனது விசாரணையின் போது, ​​இங்கிலாந்து சம்பவம் தொடர்பாக அசாமின் திப்ருகார் சிறையில் உள்ள வாரிஸ் பஞ்சாப் டி தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் ஒன்பது பேரிடம் விசாரணை நடத்தியது, அவர்கள் கண்டா வுடன் தொடர்பு கொண்டிருந்தனர். 

ஆகஸ்ட் 1 ஆம் தேதி, தாக்குதல் நடத்தியவர்களில் சிலரை அடையாளம் கண்டுகொண்ட பிறகு, பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் என்.ஐ.ஏ பல இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் அடங்கிய டிஜிட்டல் தரவுகள் கைப்பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் நடந்த போராட்டம் தொடர்பாக, என்.ஐ.ஏ குழு கடந்த மாதம் அமெரிக்கா சென்றது, அங்கு அவர்கள் இந்திய துணை தூதரகத்தின் மூத்த அதிகாரிகளுடன் பாதுகாப்பு அதிகாரிகளின் வாக்குமூலங்களை பதிவு செய்தனர். மேலும் சிசிடிவி காட்சிகள், கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து விழுந்தது போன்ற ஆதாரங்களையும் சேகரித்தனர். “நாங்கள் சிசிடிவி காட்சிகளை ஸ்கேன் செய்து மேலும் தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் காண முயற்சிக்கிறோம். நாங்கள் சிவில் ஏவியேஷன் பணியகத்தின் உதவியையும் நாடுகிறோம், ”என்று ஒரு அதிகாரி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

India London
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment