இந்தியாவில் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும், இதுபோன்ற பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக மக்கள் ஒன்றுபடாவிட்டால், அதன் விளைவுகளை வரும் தலைமுறையினர் அனுபவிக்க நேரிடும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
மேலும் அண்மையில் ஹரியானாவில் நடக்கும் வன்முறை மற்றும் ஆர்.பி.எஃப் கான்ஸ்டபிள் துப்பாக்கிச் சூடு மனதில் ஆழமான வலியை ஏற்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, “சமூகத்தின் கட்டமைப்பில் காணப்படும் சிதைவின் போக்கு, அதிகார பேராசையில் சமூகத்தில் வெறுப்பை பரப்புவதன் விளைவு” என்று தெரிவித்தார்.
மேலும், ““பொதுமக்களுக்குள் பகைமையின் விஷத்தைக் கலந்து, ஒருவரையொருவர் சண்டையிட வைப்பது நமது அரசியலமைப்பை கேலி செய்வது போன்றது” என்றார்.
ஹரியானாவில் நுஹ் பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் 4 பேர் கொல்லப்பட்டனர். குருகிராமில் உள்ள மசூதி ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது. இமாம் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதனால் அங்கு பதற்றம் நிழவுகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“