New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/02/rajan-elephant_759_cctv.jpg)
கனமான உடலைக் கொண்டிருந்தாலும், யானை ஒரு மிகச்சிறந்த நீச்சல் வீரன், அவைகளால் பல மணி நேரம் கூட நீந்த முடியும்.
கேரளாவில் இருக்கும் பெரியாறு அணையில் யானைகள் நீந்தி மகிழும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். எந்த வித கஷ்டமும் இல்லாமல், ஜாலியாக யானைகள் தண்ணீரில் நீந்தி பெரியாற்றின் மறு கரையைக் கடக்கும் இந்த வீடியோவை பலரும் லைக் செய்து வருகிறார்கள்.
”மிகச்சிறந்த காலை. யானை தன் குடும்பத்தோடு, பெரியாறில் மகிழ்ச்சியாக நீந்துகிறது. கனமான உடலைக் கொண்டிருந்தாலும், யானை ஒரு மிகச்சிறந்த நீச்சல் வீரன், அவைகளால் பல மணி நேரம் கூட நீந்த முடியும்” என்ற கேப்ஷனோடு அந்த வீடியோவை பதிவிட்டிருந்தார் பர்வீன்.
For a better #morning. An #Elephant family happily swimming across the #Periyar river. In spite of their heavy body #Elephants are excellent swimmers, gives them enough buoyancy. They can swim for hours while using their trunks for snorkeling. Courtesy: DFD Periyar TR. pic.twitter.com/EQ1iUpBCtt
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 24, 2019
25,000-க்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கும் இந்த வீடியோவுக்கு, பியூட்டிஃபுல், அமேஸிங் என கமெண்டுகளும் குவிந்து வருகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.