/tamil-ie/media/media_files/uploads/2022/10/Nand-Kishor-Gurjar.jpg)
ஞாயிற்றுக்கிழமை விஸ்வ ஹிந்து பரிஷத்தின் உள்ளூர் பிரிவு மற்றும் பிற இந்து அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட விராட் இந்து சபையின் புதிய வீடியோக்களில், லோனியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ நந்த் கிஷோர் குர்ஜார், 2020 வடகிழக்கு டெல்லி கலவரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. தொடர்பு கொண்டபோது, காசியாபாத், லோனியில் நடந்த வன்முறை பற்றி தான் பேசுவதாகக் கூறினார்.
“நாங்கள் யாரையும் துன்புறுத்த மாட்டோம், ஆனால் யாராவது நம் தாய்/சகோதரிகளை துன்புறுத்தினால், நாங்கள் அவர்களை விட்டுவிட மாட்டோம். டெல்லியில், CAA (குடியுரிமை திருத்தச் சட்டம்) காரணமாக கலவரம் வெடித்தது. அந்த நேரத்தில், இந்த ஜெகாதிகள் இந்துக்களைக் கொல்லத் தொடங்கினர். நீங்கள் அங்கே இருந்தீர்கள். எங்களை அனுமதித்தீர்கள். 2.5 லட்சம் பேரை டெல்லிக்கு அழைத்து வந்ததாக நாங்கள் குற்றம் சாட்டப்பட்டோம். நாங்கள் அவர்களிடம் விளக்கமளிக்க மட்டுமே சென்றோம், ஆனால் ஜெகாதிகளைக் கொன்றதற்காக காவல்துறை எங்கள் மீது வழக்குப் பதிவு செய்தது. நாங்கள் ஜெகாதிகளைக் கொல்வோம். எப்பொழுதும்…”
இதையும் படியுங்கள்: 22 வயது எம்.பி.பி.எஸ் முதல் 90 வயது முன்னாள் சபாநாயகர் வரை; காங்கிரஸ் பிரதிநிதிகளின் தலைவர் தேர்வு யார்?
ஞாயிற்றுக்கிழமை, பல வி.எச்.பி தலைவர்கள் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், அங்கு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பேச்சுகள் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒரு சமூகத்தை "முழுமையாக புறக்கணிக்க" வேண்டும் என்று பேசிய பேச்சாளர்களில் பா.ஜ.க எம்.பி பர்வேஷ் வர்மாவும் ஒருவர்.
A Hindu majoritarian ruling party MP in Delhi calling his hundreds of supporters to economically boycott minority Muslims in India. pic.twitter.com/XkpLUkUUKN
— Ashok Swain (@ashoswai) October 9, 2022
கடந்த வாரம் கிழக்கு டெல்லியின் சுந்தர் நாக்ரியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மணீஷ் என்ற நபர் 20 முறை குத்திக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சாஜித், ஆலம், பிலால், பைசான், மொஹ்சின் மற்றும் ஷகிர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழைய முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, குர்ஜார் பேசுவதாக வெளியாகியுள்ள வீடியோவில், “இது மீண்டும் நடக்கக்கூடாது (மனிஷின் சம்பவம்) அடுத்த திட்டத்திற்கு, லோனியில் இருந்து 50,000 ஆட்களை வரவழைப்போம். அது ஒரு பெரிய விஷயம் இல்லை. லோனியிலிருந்து 50,000 பேர் உங்களுக்காக வருவார்கள். டெல்லிக்கு தேவையான போதெல்லாம் முன்பும் வந்தார்கள். ஏனென்றால் நாங்கள் டெல்லியை வேறு (இடம்) என்று நினைக்கவில்லை,” என்று கூறுகிறார்.
குர்ஜார் தனது உரையில், சுந்தர் நாக்ரியை 'சுவர் நாக்ரி' என்றும் அழைத்தார், மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை NSA இன் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
அவரது பேச்சுக்கு பதிலளித்த டி.ஆர்.எஸ் கட்சியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் ஒய் சதீஷ் ரெட்டி, “பா.ஜ.க எம்.எல்.ஏ நந்த் கிஷோர் குர்ஜார் டெல்லி வன்முறையில் பங்கேற்றதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார்! அவர் மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ.க துணியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
குர்ஜார், இதற்கிடையில், தான் டெல்லி கலவரம் பற்றி பேசவில்லை, லோனி தொகுதி பற்றி பேசியதாக கூறினார்.
அவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “எனது போராட்டம் முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல, ஆனால் ஒவ்வொரு நாளும் இந்துக்களைக் கொல்பவர்களுக்கு எதிரானது. டெல்லி கலவரம் பற்றி நான் பேசவில்லை. நான் லோனி பகுதியைப் பற்றியும், ஜெஹாதிகளுக்கு எதிராக எப்படி ஒன்றுபட்டோம் என்பதைப் பற்றியும் பேசினேன். எனது கூற்றில் நான் நிற்கிறேன். ஏதாவது நடந்தால் 50,000 பேரை டெல்லிக்கு அழைத்துச் சென்று இந்த ஜெகாதிகளை தாக்க நான் தயாராக இருக்கிறேன்,” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.