/tamil-ie/media/media_files/uploads/2020/08/railways4.jpg)
Indian Railways
Virtual retirement organized for 2320 retiring railway employees : 2320 ரயில்வே அலுவர்கள் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவர்களுக்கு ஆன்லைன் மூலம் ப்ரியாவிடை கொடுத்துள்ளது இந்திய ரயில்வே. நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டலங்கள், கோட்டங்கள் சேர்ந்த ஓய்வு பெறும் நபர்களுக்கு ஆன்லைனில் இந்த ஃபேர்வெல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கொயல், இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மற்றும் ரயில்வே துறை வாரிய செயலாளர் சுஷாந்த் குமார் மிஸ்ரா மற்றும் இதர மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு காலத்தில் சரக்கு போக்குவரத்து, பார்சல் ரயில்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களின் மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்கள் போன்றவற்றை இடையறாது இயக்கியது இந்திய ரயில்வே.
இத்தகைய சமயத்தில் இந்திய ரயில்வே ஆற்றிய பங்கு மிகப்பெரியது. கொரோனா காலத்தில் பணியாற்றும் முன்கள பணியாளர்களின் சேவைக்கு நிகரானது ரயில்வே துறையினர் சேவை என்று குறிப்பிட்டார் அவர். ஜூலை 31ம் தேதி அன்று தங்களின் சேவையை நிறைவு செய்த அனைவருக்கும் ப்ரியாவிடை கொடுத்து, எதிர்கால வாழ்விற்கு வாழ்த்துகள் தெரிவித்து பாராட்டினார் ரயில்வே துறை அமைச்சர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.