மோடியை எடுத்து விட்டால் போதும் எதிர்கட்சியினரின் 90% பேச்சுகள் முடிந்து விடும் : அருண் ஜெட்லி!

மோடி ஒரு வாக்கு இயந்திரமாக இருப்பதை யாராலும் மாற்ற முடியாது

By: Updated: April 8, 2019, 10:21:09 AM

ரவீஷ் திவாரி

Arun Jaitley interview : இந்த மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி கிட்டதட்ட ஒரு வாக்கு இயந்திரம் போல் மாறிவிட்டார். அவரை எடுத்துவிட்டால் போதும் எதிர்கட்சியினரின் 90 சதவீத பேச்சுகள் மொத்தமாக முடிந்து விடும் என்று பாஜக தலைவர்களில் ஒருவரும், மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அருண் ஜெட்லி அளித்துள்ள பேட்டியில் அவர் பேசியிருப்பதாவது, “தேர்தலின் போது தலைவர்களின் மீது அதிகளவு ஈர்ப்பு அல்லது கவனம் செல்வது என்பது இயல்பான ஒன்று. வாஜ்பாய் இருந்த காலக்கட்டத்தில் எனக்கு நன்கு நினைவு இருக்கிறது 1998 – 1999 -ல் நடந்த தேர்தல் வாஜ்பாய் தேர்தல் என்றே அழைக்கப்பட்டது.

அதே போல் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்தில் நடந்த தேர்தலும் அப்படித்தான் கூறப்பட்டது. முக்கியமான தலைவர்கள் போட்டியிடும் நேரத்தில் நடைபெறும் தேர்த அவர்களை முன்னிறுத்தியே அழைக்கப்படுவது இந்தியாவுக்கு புதிததல்ல.

ஆனால் இம்முறை இதே கேள்வி வேறு விதமாக கேட்கப்படுகிறது. மோடியை எடுத்துவிட்டால் போது எதிர்கட்சியினரின் 90 சதவீத பேச்சுகள் நின்று விடும். ஆனால் நான் பின்வாங்க போவதில்லை. இந்த தேர்தலில் மோடி ஒரு வாக்கு இயந்திரமாக இருப்பதை யாராலும் மாற்ற முடியாது.” என்று கூறினார்.

பிஜேபி பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமரின் ஆதிக்கம் அதிகளவு இருப்பதாகவும், எல்லா இடத்திலும் அவரின் ஆளுமை வெளிப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கும் அருண் ஜெட்லி பதில் அளித்தார்.

அவர் கூறியது, “கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சி காலத்தில் இந்தியா கண்ட மாற்றம், அடைந்த திருப்புனைகள், முக்கிய முடிவுகள் ஆகியவற்றை எடுத்துரைக்க பிரம்மாண்ட தலைவராக மோடியே திகழ்கிறார். பாஜக அல்லது மோடி அரசாங்கம் என்று கூறப்படுவது தேர்தலுக்கு ஒரு பிராண்ட் போன்றது. சில பொருட்கள் மட்டுமே பிராண்டை பிரபலப்படுத்தும். வெறுமையாகவே பிராண்ட் உருவாகிடாது அல்லது பிரபலமும் ஆகாது. ஒரு மிகச் சிறந்த பிராண்ட் மக்களால் அதிகம் விரும்பக்கூடிய பொருள் அல்லது நபர் மட்டுமே ஒரு நிறுவனத்தின் அல்லது ஒரு கட்சியின் பிராண்ட் ஆவார்.

நான் முன்பு சொன்னது போல் தான்.நாங்கள் வெற்றி ஆட்சி நடத்திய அரசாங்கம். எங்கள் ஆட்சி காலத்தில் இந்தியா பொருளாதாரத்தில் மிகப் பெரிய இடத்தை அடைந்திருக்கிறது. ஏழைகளின் வளர்ச்சிக்கு உண்மையாக பாடுபடுள்ளோம். மாநிலத்தின் பாதுகாப்பில் ஆகச்சிறந்த வரலாற்றை படைத்துள்ளோம் “என்று தெரிவித்தார்.

அருண் ஜெட்லியிடம் அடுத்ததாக முன் வைக்கப்பட்ட கேள்வி,கட்சி குறித்து மூத்த தலைவர்கள் பொது இடங்களில் வெறுப்பான விமர்சனத்தை முன் வைப்பதற்கான காரணம்?

“அரசியலில் இருக்கும் சில மூத்த தலைவர்கள் சிலர் இன்னும் சரியான அரசியலை புரிந்து வைத்துக் கொள்ளவில்லை. சொந்த கட்சியை குறித்தே, இருக்கும் கட்சியை பற்றியே எதிராக பேசுவது அவர்களுக்கு எதிராக திரும்புவது என்பதை நான் விமர்சிக்க விரும்பவில்லை. இதுக் குறித்து ஒரு தனிப்பட்ட கருத்து எனக்கு இருக்கிறது. கட்சிக்கு எதிராக விமர்சிப்பவர்கள் அவர்கள் கட்சியின் நலனுக்காக இத்தகைய கருத்தை கூறுவதில்லை.

அவர்கள் தங்களின் தனிப்பட்ட அடையாளத்திற்காகவே இவ்வாறு செய்கின்றனர். அவர்களின் கருத்து கட்சியின் கருத்தாகது. இதன் மூலம் அவர்கள் மீடியாவில் பிரபலமாவர்கள். இந்த செயல் பாஜகவில் அதிகம் நிகழ்வதை எண்ணி உண்மையில் நான் வருந்துகிறேன்”என்றார்.

பாஜக ஆட்சி காலத்தில் நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக், மற்றும் பாலகோட் தாக்குதல் குறித்து ஜெட்லி கருத்து, “ இவை அனைத்தும் பாஜக ஆட்சியில் நடந்த திருப்புனைகள். இந்திய வரலாற்றில் மாற்றியமைக்க முடியாத நிகழ்வுகள். பயங்கரவாதிகளை இந்தியா வேரோடு அழிக்க தயார் ஆகிவிட்டது என்பதை இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. இந்தியாவின் இந்த செயல்களை உலக நாடுகளும் வரவேற்கின்றன. என்றார்.

மக்களவை தேர்தலே இவை அனைத்திற்கும் பின்னணி என கூறப்படும் குற்றச்சாட்டிற்கு உங்கள் பதில் “இந்த செயலுக்கு பின்னால் இருப்பது தேர்தல் அல்ல. தேசிய பாதுகாப்பும், இந்திய இறையாண்மையும். இந்த இரண்டும் இப்போது தேர்தல் பிரச்சனையாக பரபரப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹ்போபா முஃப்தி ஆகியோரிடமிருந்து வரும் இதுப்போன்ற அபாய அறிக்கைகள் தேர்தலுக்கு பிரச்சனையாக அமையாதா? எப்போதுமே தணித்து செயல்படும் பாஜக அரசு இந்த தேர்தலில் அவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிக்கும்.” என்று கூறினார்.

”பிஜேபி அரசு நாட்டை ஒரு இழிவான மனநிலையிலிருந்து மீட்டெடுத்துள்ளது. தொழில் துறை புரட்சி, பொருளாதார புரட்சி என கடந்த 5 ஆண்டுகளின் இந்தியா கண்ட மாற்றங்கள் ஏராளம். எங்களின் 5 ஆண்டு ஆட்சி காலத்தில் இந்தியாவை நாங்கள் விரும்பிய தேசமாக மாற்றி விட்டோம் என நினைக்கிறேன். இந்த மாற்றம் 2030 ல் இருந்து 2047 வரை, சுதந்திரம் அடைந்த 100 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா வளர்ச்சி விகிதத்தில், உலக வகுப்பு உள்கட்டமைப்புடன் வறுமை இல்லாத ஒரு தேசத்திற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Virtually become a referendum on prime minister narendra modi arun jaitley

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X