விசாகப்பட்டினம் விஷ வாயுக் கசிவு : உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு

 வாயுக்கசிவு தொடர்பாக விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பியுள்ளது. 

visakhapatnam gas leak state government announces 1 crore compensation
visakhapatnam gas leak state government announces 1 crore compensation

Visakhapatnam gas leak state government announces 1 crore compensation : இன்று காலை ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கும் விசாகப்பட்டினத்தில் விசவாயுக் கசிவு ஏற்பட்டது. அந்த விபத்தில் 8க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் விசாகப்பட்டினத்தை வந்தடைந்த ஆந்திரப்பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, வாயுக்கசிவால் பாதிப்படைந்த மக்களை மருத்துவமனையில் வைத்து சந்தித்தார். மேலும், இந்த வாயுக்கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவியினால் சுவாசம் பெற்றுக் கொண்டிருக்கும் மக்களுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இந்த வாயுக்கசிவு தொடர்பாக விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் படிக்க : டாஸ்மாக் மீம்ஸ்: முதலில் தாத்தா! 2வது அப்பா! அடுத்து நாம போவோம்! அப்புறம் எல்லோரும்…

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Visakhapatnam gas leak state government announces 1 crore compensation

Next Story
44 நாட்கள், 31 வெளி மாநில தொழிலாளர்கள் : பண்ணை வீட்டில் பாதுகாத்த பிரகாஷ் ராஜ்Actor Prakash Raj helps migrant workers
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com