scorecardresearch

அமராவதி செல்ல மறுக்கும் ஜெகன்.. புதிய தலைநகரை அறிவித்தார்.. ஆந்திராவில் அரசியல் பரபரப்பு

அமராவதியை தலைநகராக மாற்றுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Visakhapatnam to be Andhra Pradeshs new capital says CM Jagan Mohan Reddy
ஆந்திரா முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக அமராவதியை உருவாக்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், ”விசாகப்பட்டினம் விரைவில் மாநிலத்தின் தலைநகராக மாறும்” என ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி செவ்வாய்க்கிழமை (ஜன.31) மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற சர்வதேச இராஜதந்திரக் கூட்டணி கூட்டத்தில் முதலீட்டாளர்களிடம் உரையாற்றிய முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ‘வரும் நாள்களில் எங்கள் தலைநகராக இருக்கும் விசாகப்பட்டினத்திற்கு உங்களை அழைக்க வந்துள்ளேன்.
வரும் மாதங்களில் நானே அங்கு மாறுவேன். மார்ச் 3 மற்றும் 4 தேதிகளில் விசாகப்பட்டினத்தில் நாங்கள் நடத்தும் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டிற்கு உங்களை அழைக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டில், ஜெகன் முதலில் “பரவலாக்கப்பட்ட வளர்ச்சி” யோசனையை முன்மொழிந்தார். மாநிலத்தில் மூன்று தலைநகரங்களை நிறுவினார்.
அதன்படி முன்னாள் முதல் அமைச்சர் என். சந்திரபாபு நாயுடு உருவாக்கிய, அமராவதி – சட்டமன்றத் தலைநகராகவும், விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், கர்னூல் நீதித்துறை தலைநகராகவும் இருக்கும் என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், மார்ச் 3, 2022 அன்று, ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், முந்தைய தெலுங்கு தேசக் கட்சி அரசாங்கத்தின் தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையத்தின் (CRDA) சட்டத்தின் கீழ் உத்தேசிக்கப்பட்ட தலைநகர் அமராவதியை உருவாக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், தலைநகர் அமராவதியின் வளர்ச்சிக்காக நிலத்தை விட்டுக்கொடுத்த விவசாயிகள் மற்றும் ராஜ்தானி விவசாய பரிரக்‌ஷனா சமிதி என்ற பதாகையின் கீழ் தங்களை ஒருங்கிணைத்து, மாநில அரசின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அப்போது, விவசாயிகள் விட்டுக்கொடுத்த விவசாய நிலத்துக்குப் பதிலாக விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட மனைகளையும் அரசு மேம்படுத்தி, மூன்று மாதங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும், வளர்ந்த மனைகளைச் சுற்றி உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியது.

அறிவு நகரம், சுகாதார நகரம், மின்னணு நகரம், சுற்றுலா நகரம், நீதி நகரம், ஊடக நகரம், விளையாட்டு நகரம், நிதி நகரம் மற்றும் அமராவதி ஆகிய ஒன்பது தீம் நகரங்களின் வளர்ச்சி போன்ற பிற திட்டங்களும் உயர் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஜெகன் மோகன் ரெட்டி அரசு, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

நவம்பர் 28, 2022 அன்று, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு ஜனவரி 31, 2023 வரை தடை விதித்து, மத்திய அரசு, ஆந்திரப் பிரதேச அரசு மற்றும் அமராவதி ராஜ்தானி ரிது பரிரக்ஷனன் சமிதியிடம் பதில்களைக் கோரியது.

அப்போது, ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக, 2013ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தைப் பிரிக்கும் விவகாரத்தில் தனது கருத்தைத் தெரிவித்ததால், தலைமை நீதிபதி யு.யு.லலித் வழக்கில் இருந்து விலகினார் என்பது நினைவு கூரத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Visakhapatnam to be andhra pradeshs new capital says cm jagan mohan reddy