விவோ சீன நிறுவனத்தின் மீது அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது. விவோ இந்தியா மூலம் "இறக்குமதியின் கீழ்" இந்தியாவிடமிருந்து ரூ. 70,000 கோடியை பெற்றதாக விவோ சீனா மீது அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் உள்ள பல குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.
"விவோ இந்தியா மற்றும் அதன் 23 SDCs (மாநில விநியோகஸ்தர் நிறுவனங்கள்) மூலம் இந்தியாவில் Vivo மொபைல்களின் அனைத்து செயல்பாடுகளையும் விவோ சீனா கட்டுப்படுத்தி, ஏகபோகமாக வைத்திருந்தது" என்று ஏஜென்சி தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
விவோ மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட், 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவிற்கு வெளியே ரூ.70,837 கோடியை அனுப்பியதாக மத்திய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. "பொருட்களின் இறக்குமதிக்கான கட்டணத்தின் கீழ்", விவோ மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் மூலம் அவர்களது வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கு பெரும் தொகை
மாற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள சட்ட அமலாக்க முகவர்களால் கவனிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக விவோ சீனா விவோ இந்தியாவுடனான தனது உறவை "மறைக்க" முயன்றது என்று இ.டி தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது.
விவோ சீனா மேலும் ஒரு அமைப்பை உருவாக்கியது, இது "விவோ இந்தியாவிலிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ள உதவியது, இருப்பினும், கார்ப்பரேட் திரையின் கீழ் விநியோக சப்ளை சங்கிலி தொடர்ந்து கட்டுப்படுத்துகிறது" என்று அது கூறியது. அமலாக்கத்துறை கூற்றுப் படி அனைத்து நிறுவனங்களும் உண்மையில் "ஒரு மாஸ்டர் - விவோ சீனாவால் கட்டுப்படுத்தப்பட்டு சொந்தமாக்கப்பட்டவை என்றது.
ஆங்கிலத்தில் படிக்க: ED: Vivo China siphoned off Rs 70,000 crore under garb of imports
Vivo China Labquest Engineering Pvt Ltd என்ற இந்திய நிறுவனத்தை "சில்லறை வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முன்னணியா விவோ சீனா பயன்படுத்தியது, இது இந்தியாவின் எஃப்.டி.ஐ கொள்கையின்படி தானியங்கி வழியில் 100% எஃப்.டி.ஐ மூலம் மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. "எந்தவித சந்தேகத்தையும் தவிர்க்க" இந்தியாவுக்கு வருவதற்கான அழைப்புக் கடிதங்களைப் பெற சீன நாட்டவர்கள் இந்திய நிறுவனமான லாவா இன்டர்நேஷனல் லிமிடெட்டைப் பயன்படுத்தியதாகவும் இ.டி குற்றம் சாட்டியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“