ஸ்ரீனிவாஸ் ஜன்யாலா
Vizianagaram Distict Collector Vivek Yadav: ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் மின்சார கட்டணம் உச்ச கட்டத்தில் இருந்தது. அதற்கு கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் அங்கே வெப்பமான வானிலை நிலவுவதே காரணமாக இருந்தது. இதுவே விஜயநகர மாவட்ட ஆட்சியர் விவேக் யாதவை மாற்று எரிசக்தியை நோக்கி சிந்திக்க வைத்துள்ளது. அவர் சூரிய மின்சக்தியை பயன்படுத்தும் முயற்சியைத் தொடங்கிய 18 மாதங்களில் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் சூரிய மின்சக்திக்கு மாறியுள்ளன.
கடந்த ஜனவரி மாதம், பொது - தனியார் கூட்டு ஒத்துழைப்பில் விஜயநகரத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள துவாரபுடி கிராமத்திற்கு அருகில் ஒரு சிறிய குன்றின் மீது 5 ஏக்கருக்கு மேல் சோலார் பலகைகள் வைக்கப்பட்டன. இந்த பலகைகள் இப்போது 1 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க உதவுகின்றன. அது விஜயநகரம் மாநகராட்சியின் கீழ் உள்ள பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகம் செய்கிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸின் முதல் எக்சலன்ஸ் இன் ஜர்னலிசம் விருதுகளில் எரிசக்தி பிரிவில் விவேக் யாதவ் விருது பெற்றார். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், இதேபோன்ற நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட அவர்களின் ஆராய்ச்சியின் அடிப்படையில், துவாரபுடி போன்ற ஒரு திட்டத்தின் காரணமாக கார்பன் உமிழ்வு குறைப்பு ஆண்டுக்கு 1008 மெட்ரிக் டன் ஆக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.
சூரிய ஆற்றலால் இயங்கும் நீர்ப்பாசனத்திற்கான போர்வெல் இணைப்புகளை ஊக்குவிக்க என்.டி.ஆர் ஜலசயம் என்ற அரசு திட்டம் ஏற்கனவே உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விவேக் யாதவ் கூறினார். மேலும் அவர் கூறுகையில் “அரசாங்க நிறுவனங்களைப் பொறுத்தவரை, இடம் சவாலாக இருந்தது. பொதுவாக இந்த அலுவலகங்கள் பழமையானவை அதனால் கூரைகளில் சோலார் பலகைகளை கூரையின் மேல் பொருத்தப்படவில்லை. கூரை மேல் சோலார் பொருத்தி நாங்கள் ஏற்கெனவே 1 மெகாவாட் சூரியசக்தியை நகராட்சி பிரிவுக்கு பிரத்தியேகமாக உற்பத்தி செய்து கொண்டிருந்தோம். எனவே, ஒரு மலையில் அரசாங்க நிலத்தை அடையாளம் கண்டு சோலார் பலகைகளை பரப்பினோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோலார் பலகைகளை நிறுவினோம். இது பள்ளி கல்லூரிகள் போன்ற பிற நிறுவனங்களும் இதில் சேர ஊக்கமளித்தது.” என்று தெரிவித்தார்.
விஜயநகரம் எம்.எல்.ஏ. எம்.கீதா கூறுகையில், “மாவட்ட ஆட்சியரகம், மாநகராட்சி அலுவலகம் மற்றும் இரண்டு அலுவலகங்கள் உட்பட 10 அரசு கட்டிடங்களில் சோலா பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.
இதுமட்டுமில்லாமல், 43 சமூக நல அரசு பள்ளிகள், 43 கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயாக்களின் கூரை மேல் இப்போது சோலார் ஹீட்டர்கள் உள்ளன. இந்த பகுதியில் தற்கு முன்னர் சூரிய சக்தி பற்றி மிகக் குறைவான விழிப்புணர்வு இருந்தது.
“முன்னதாக எங்களுக்கு மாதத்திற்கு ரூ.12,000 மின்சாரக் கட்டணம் வந்தது. அது தற்போது ரூ.6000 - 7000 ஆக குறைந்துள்ளது. மக்கள் குறிப்பாக அரசு ஊழியர்கள் சூரியசக்தி மற்றும் அதன் நன்மைகள் குறித்து இப்போது நன்கு அறிந்திருக்கிறார்கள்” என்று பொப்பிலி நகராட்சி ஆணையர் எச்.சங்கர் கூறினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கே.சுப்பாராவ் கூறுகையில், இப்போது சூரிய சக்தியில் இயங்கும் நான்கு மண்டல அலுவலகங்களில் மொத்த மின்சாரக் கட்டணத்தில் 50 சதவீதம் குறைந்துள்ளது. விவசாயிகள் சூரிய விவசாய பம்ப்செட்டுகள் மற்றும் சூரிய விளக்குகள் பற்றி கேட்கிறார்கள் என்று கூறினார்.
விவேக் யாதவ் அரசு துறைகளுக்கும் திட்டங்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் அடைவதையே அவருடைய முதன்மை வேலையாகப் பார்த்தார். “ஏற்கனவே நிறைய திட்டங்கள் உள்ளன. மாவட்ட அளவில், ஒரு மாவட்ட மேஜிஸ்ட்ரேட் என்ற வகையில், துறைகள் மற்றும் அமைப்புகளை ஒருங்கிணைத்து, முழு விஷயத்தையும் ஒருங்கிணைக்கும் திட்டத்துடன் வருவதே எங்கள் பங்கு” என்று விவேக் யாதவ் கூறினார்.
சூரிய சக்தியை பரவலாக ஏற்றுக்கொள்வதற்கான வழியில் வருவது சோலார் பலகைகளை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் அதிக செலவு ஆகும் என்று சில அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரு அதிகாரி கூறுகையில், “பொப்பிலி முனிசிபல் கார்ப்பரேஷன் கட்டிடம் சூரிய சக்தியில் இயங்கக்கூடியது, அதற்கு ரூ .13 லட்சம் தேவைப்பட்டதால், விஜயநகரம் எம்.பி. பி.அசோக் கஜபதி ராஜு ரூ .10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இல்லையெனில் நகராட்சி நிதியில் இருந்து இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்க முடியாது. ” என்று தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.