அடுக்குமாடி குடியிருப்புகளில் இரவில் உலா வரும் வாலிபர்.. அதிர்ச்சி தகவல்களை வெளியிட்ட பெண்கள்!

ஜன்னலுக்கு அருகில் இருக்கும் பேண்ட்களில் இருந்து ஆண்களின் பர்ச்சையும் திருடியுள்ளான்.

கோவாவில்   அடுக்குமாடி குடியிருப்பில் பெண்கள் அறையில் தூங்குவதை எட்டிப் பார்க்கும் வக்கீர புத்திக் கொண்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவாவில் உள்ள பிரபல  அடுக்குமாடி குடியிருப்பில்  வசிக்கும் பெண் ஒருவர் தினங்களுக்கு முன்பு உள்ளூர் காவல் நிலையத்தில் புகா ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில்  இரவில் தான் தூங்குவதை மர்ம நபர் ஒருவர் மறைந்து நின்று பார்ப்பதாக கூறியிருந்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட அடுக்குமாடிக்கு விரைந்து, அங்கிருக்கும் மற்ற பெண்களிடம் இதுக் குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது தான்   திடுக்கிடும் பல தகவல்கள் வெளிவந்தன.   அங்கிருக்கும் பல பெண்கள் இரவில் தன்னை யாரோ கவனிப்பது போல் உணர்ந்துள்ளனர்.

மேலும், சிலர்  அந்த மனிதரை தூக்கத்தில் கவனித்தும் இருந்து இருக்கின்றனர். ஆனால் காலை விடிந்ததும் அது கனவாக இருக்கும அல்லது நிழலாக இருக்கும் என்று எண்ணி அலட்டிக்காமல் இருந்துள்ளனர்.  அனைவரிடமும் தகவலை சேகரித்த காவல் துறையினர் வக்கீர புத்திக்கொண்ட மர்ம மனிதரை 48 மணி நேரத்தில் பொறி வைத்து பிடித்துள்ளனர்.

மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதித்து பார்த்ததில் அந்த நபர்,  உள்ளாடை மட்டும் அணிந்தபடி உடல் முழுவதும் எண்ணெய் தடவிக் கொண்டுஒவ்வொரு வீட்டின் ஜன்னல் வழியாக பெண்கள் தூங்குவதை நின்று ரசித்துள்ளான். சில சமயங்களில் ஜன்னலுக்கு அருகில் இருக்கும் பேண்ட்களில் இருந்து ஆண்களின் பர்ச்சையும் திருடியுள்ளான்.

இவை எல்லாவற்றையும் பார்த்த காவல் துறையினர்,   2 பெண்களின் உதவியுடன் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close