வாக் பக்ரி குழுமத்தின் நிர்வாக இயக்குனரான பராக் தேசாய், தெருநாய்கள் தாக்கியதில் தலையில் காயம் அடைந்த சில நாட்களுக்குப் பிறகு, அகமதாபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்தார். அவருக்கு வயது 49. 1892 இல் நாரந்தாஸ் தேசாய் அவர்களால் நிறுவப்பட்ட நிறுவனத்தின் வணிகங்களை நிர்வகிக்கும் தேசாய் குடும்பத்தின் நான்காவது தலைமுறை உறுப்பினராக பராக் தேசாய் இருந்தார்.
ஆங்கிலத்தில் படிக்க: Wagh Bakri Group Executive Director Parag Desai passes away days after attack by stray dogs
பராக் தேசாய் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தெருநாய்கள் அவரைத் துரத்தியதால் அவர் சாலையில் விழுந்து மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஞாயிற்றுக்கிழமை அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
திங்கள்கிழமை காலை அவரது இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்ட அகமதாபாத்தில் உள்ள தால்தேஜ் தகனத்திற்கு பல வாக் பக்ரி ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள், வர்த்தக மற்றும் தொழில்துறை தலைவர்கள் வந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“