ஹோலி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற வட மாநில தொழிலாளர்கள் எவ்வளவு பேர் மீண்டும் பணிக்கு வருவார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தமிழ்நாடு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் குறிப்பாக பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான 2 வீடியோக்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் உண்மையில்லை என்றும் இது போல போலிச் செய்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை தெரிவித்தது. தமிழக முதல்வரிடம் , பிஹார் முதல்வர் நித்திஷ் குமார் இது தொடர்பாக உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார். தமிழகம் வந்தடைந்த பீகார் குழு, இங்கே வட மாநில தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் யாரும் அச்சமடைய வேண்டாம் என்று தெரிவித்தது.
தமிழகத்தை 10 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிவதாக அரசு தரவுகள் கூறுகிறது. இந்த போலியான வீடியோ இவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட சிறு நிறுவனங்கள் சங்கத்தின் செயலாளர் விஜயன் கூறுகையில் “ ஒட்டுமொத்த உற்பத்தி துறையும் வட மாநில தொழிலாளர்களை நம்பிதான் இருக்கிறது. வட மாநிலத்திலிருந்து வரும் தொழிலாளர்களை நம்பித்தான் இங்கே வியாபாரம் நடைபெறுகிறது. இதுபோன்ற வதந்திகள் தொடர்ந்து வெளி வந்தால், ஒட்டுமொத்த தொழிலுமே பாதிக்கப்படும். ஹோலி பண்டிகை காரணமாக வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.இதில் எவ்வளவு பேர் மீண்டும் பணி செய்ய வருவார்கள் என்று தெரியவில்லை” என அவர் கூறினார் .
10 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்களில் பாதிபேர் வடக்கு தமிழ்நாட்டில் அதாவது திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய நகரங்களில் தங்கி உள்ளனர். மீதிபேர், திருப்பூர், கோவை, ஈரோடில் இருகின்றனர்.
ரயில்வே சப்லையர்ஸ் சங்கத்தின் தலைவர் சுருலிவெல் கூறுகையில் “ கிட்டதட்ட 2,000 வட மாநில தொழிலாளர்க்ள் கந்த 3 நாட்களில் சொந்த ஊர்களுக்கு திரும்பு உள்ளனர். கிட்டதட்ட 20 ஆயிரம் புலம் பெயர் தொழிலாளர்கள், கோவையில் உள்ள சிப்காட்டில் மட்டும் பணிபுரிகின்றனர்” என்று அவர் கூறினார்.
இதுபோல கட்டங்கள் அமைக்கும் தொழிலில் சிறந்து விளங்கும் ஒரு பொறியாளார் கூறுகையில் “ சில தொழிலாளர்கள் ஹோலி கொண்டாட முன்பே சென்றுவிட்டனர்.இந்நிலையில் கடந்த 3 நாட்களில், சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்று வட மாநில தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர், இப்போது பரப்பப்படும் வதந்திகள் தொடர்பாக எடுத்து சொல்ல முயற்சித்தோம். ஆனால் அந்த போலி செய்திகள் யாவும் ஹிந்தியில் இருப்பதால் அதை புரிந்துகொள்ள முடியவில்லை“ அவர் கூறினார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டார். இதில் வட மாநில ஊழியர்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் தமிழர்கள் நல்லவர்கள் மற்றும் நட்பானவர்கள் என்றும் கூறியிருந்தார்.
சென்னை, கிண்டியில் உள்ள முக்கிய கட்டட வேலை செய்யும் இடத்தில் பணிபுரியும் கட்ட தொழிலாளி ஸ்ரீராம் ( 20வயது) கூறுகையில் “நான் வேலை செய்யும் இடத்திலிருந்து இதுவரை யாரும், சொந்த ஊர்களுக்கு செல்லவில்லை. தங்கும் இடம் மற்றும் உணவு ஆகியவை வேலை இடத்திற்கு அருகிலே இருப்பதால் யாரும் செல்லவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் பேருந்தில் வேலைக்கு செல்லும் வட மாநிலதொழிலாளர்கள் இந்த வதந்திகள் தொடர்பாக பதற்றத்தில் இருக்கிறார்கள’ என்று கூறினார்.
இந்நிலையில் பல்வேறு வட மாநில தொழிலாளர்கள், இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, “ சென்னையில் வேலை செய்தால் ஒரு நாளை ரூ.500 வரை தருகிறார்கள். ஆனால் எங்கள் சொந்த ஊர்களில் வெறும் ரூ.200-தான் கிடைக்கும். மேலும் இங்கே எங்களை நல்லவிதமாக நடத்துகிறார்கள். ஆனால் அங்கே எங்களை பணி அமர்த்துபவர்கள் எங்களிடம் சண்டை போடுவார்கள்” என்று அவர் கூறினார்.