ஜாமீன் வேண்டுமா? அப்ப கேரளாவுக்கு நிதியுதவி செய்..நீதிபதியின் பலே ஐடியா!

ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்பித்த பின்பு, நிபந்தனை ஜாமீன் வழங்கப்படும்

ஜாமீன்
ஜாமீன்

உச்ச நீதிமன்ற  நீதிபதி ஜாமீன் கோரிய மூவருக்கு வழங்கிய தீர்ப்பு  பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் பலதரப்பட்ட வழக்குகள் வந்து செல்வது யதார்த்தம். ஆனால் ஒரு சில நேரங்களில் மட்டுமே இதுப் போன்ற தீர்ப்புகள் வழங்கப்படும். அப்படியொரு தீர்ப்புத் தான் ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் மோசடி செய்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட மூன்று பேர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.பி சிங் மூவருக்கும் கண்டீஷன் போட்டுள்ளார்.

அதன்படி ஜாமீன் கோரிய மூவரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு தலா ரூ 7000 நிவாரண நிதியாக வழக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மூவரும் நிதி வழங்கியதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்பித்த பின்பு, நிபந்தனை ஜாமீன் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நீதிபதியின் இந்த தீர்ப்பு சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Want anticipatory bail deposit money in kerala

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express