/indian-express-tamil/media/media_files/2025/09/15/supreme-court-on-waqf-bill-2025-09-15-13-09-29.jpg)
Supreme court on waqf bill
உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை, வக்ஃப் திருத்தச் சட்டம், 2025-க்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தது. இந்தச் சட்டம் வக்ஃப் சொத்துக்களைப் பயன்படுத்துவோர் அனைவரும் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. அதேசமயம், ஒரு வக்ஃப் அமைப்பை உருவாக்குவதற்கு ஒரு நபர் ஐந்து வருடங்களாக இஸ்லாத்தைத் பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்ற பிரிவை, மாநில அரசுகள் அதற்கான விதிகளை வகுக்கும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி.மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு, “1923-ஆம் ஆண்டின் சட்டம் முதல் தற்போது வரையிலான சட்ட வரலாற்றை நாங்கள் ஆய்வு செய்துள்ளோம். ஒட்டுமொத்த சட்டத்தையும் நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், சில பிரிவுகளுக்குப் பாதுகாப்பு தேவைப்படுகிறது" என்று தெரிவித்தனர்.
இடைக்கால உத்தரவைப் படித்த தலைமை நீதிபதி கவாய், “1995 முதல் 2013 வரை வக்ஃப் பதிவிற்கான தேவை இருந்தது. அது 2013-இல் நீக்கப்பட்டது. எனவே, இதில் புதிதாக எதுவும் இல்லை" என்று கூறினார்.
வக்ஃப் சொத்துகளை உருவாக்க ஒரு நபர் ஐந்து ஆண்டுகளுக்கு இஸ்லாமியராக இருந்திருக்க வேண்டும் என்ற பிரிவு 3(1)(r) குறித்த விவகாரத்தில், “ஒரு நபர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தைப் பின்பற்றியுள்ளாரா என்பதைத் தீர்மானிக்க ஒரு வழிமுறையை மாநில அரசுகள் உருவாக்கும் வரை இந்த பிரிவு நிறுத்தி வைக்கப்படும். இத்தகைய வழிமுறை இல்லாத நிலையில், இது அதிகாரத்தின் தன்னிச்சையான பயன்பாட்டிற்கு வழிவகுக்கும்" என்று நீதிமன்றம் கூறியது.
மேலும், வக்ஃப் சொத்துகள் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதா என்பது குறித்து அரசு அதிகாரி அறிக்கை சமர்ப்பிக்க அனுமதிக்கும் விதியையும் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதன் மூலம், வக்ஃப் பதிவேடுகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வக்ஃப் வாரியத்திற்கு அரசு உத்தரவிட முடியும்.
சொத்து மீதான உரிமையைத் தீர்மானிக்க கலெக்டருக்கு அனுமதிக்கும் இந்த விதி, அதிகாரப் பிரிவினைக்கு எதிரானது என்றும் நீதிமன்றம் கூறியது. “சொத்து மீதான உரிமைகளைத் தீர்மானிக்க நிர்வாகத்திற்கு அனுமதி அளிக்க முடியாது. அதிகாரி ஒருவரின் தீர்ப்பிற்கு இறுதித் தன்மை இல்லாத வரையில், சொத்தின் மீதான உடைமை அல்லது உரிமைகள் பாதிக்கப்படாது. வக்ஃப் சொத்தின் உரிமை தொடர்பான பிரச்சினை இறுதியாகத் தீர்க்கப்படாத வரையில், அந்தச் சொத்து தொடர்பாக எந்த மூன்றாம் தரப்பினருக்கும் எதிராக எந்த உரிமைகளும் உருவாக்கப்பட முடியாது."
வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை நியமிக்க அனுமதிக்கும் விதியை நீதிமன்றம் நிறுத்தி வைக்கவில்லை. இருப்பினும், 20 உறுப்பினர்களைக் கொண்ட வாரியத்தில் நான்கு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேலும், 11 உறுப்பினர்களைக் கொண்ட மாநில வக்ஃப் வாரியங்களில் மூன்று முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேலும் இருக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் கூறியது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us