Advertisment

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்... மீண்டும் பங்கேற்பு

டெல்லி வக்ஃப் வாரிய நிர்வாகி டெல்லி அரசின் ஒப்புதல் இல்லாமல் குழுத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பித்ததாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறினர்.

author-image
WebDesk
New Update
Owaisi 1

நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தவர்களில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தேசிய தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசியும் இருந்தார். (Express Photo)

வக்ஃப் (திருத்தம்) மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திங்கள்கிழமை மீண்டும் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். “வக்ஃப் திருத்த மசோதாவில் எந்த பங்கும் இல்லாதவர்கள் குழுவால் வாய்மொழிவழி ஆதாரத்திற்கு அழைக்கப்படுகிறார்கள்” என்று குற்றம் சாட்டினர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Waqf Amendment Bill: Opposition members walk out of parliamentary panel meeting, rejoin later

திங்கள்கிழமை நடந்த நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தவர்களில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐஎம்.ஐ.எம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி, காங்கிரஸ் உறுப்பினர் முகமது ஜாவேத் மற்றும் சமாஜ்வாதி கட்சி (எஸ்.பி) உறுப்பினர் மொஹிப்புல்லா நத்வி ஆகியோர் அடங்குவர். இருப்பினும், சிறிது நேரம் விலகி இருந்த அவர்கள் பின்னர் மீண்டும் கூட்டத்தில் இணைந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி வக்ஃப் வாரிய நிர்வாகி, குழுத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இது டெல்லி அரசின் அனுமதி பெறாமல் நடந்ததாகக் கூறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் நாடாளுமன்றக் குழு தலைவர் ஜகதாம்பிகா பாலிடம், டெல்லிஅரசின் ஒப்புதலைப் பெறாமல் அந்த அதிகாரி குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்ததாகவும், அதை "பூஜ்ய மற்றும் செல்லாததாக" கருத வேண்டும் என்றும் ஒரு கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது.

பாஜக உறுப்பினரும் முன்னாள் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாயுடனான சூடான விவாதத்தின் போது கண்ணாடி பாட்டிலை உடைத்ததற்காக திரிணாமுல் காங்கிரஸ் (டி.எம்சி) எம்.பி கல்யாண் பானர்ஜி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றக் குழுவிலிருந்து ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர்,  நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்றக் குழுவின் தலைவரான பா.ஜ.க எம்.பி பால், பின்னர், பானர்ஜி பாட்டிலால் "நாற்காலியை அடிக்க" முயன்றதாக குற்றம் சாட்டினார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, பா.ஜக உறுப்பினர்கள் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரினர். திங்கட்கிழமை சந்திப்பின் போது பானர்ஜி இல்லை என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு தெரியவந்தது. 

திங்கள்கிழமை நடந்த குழு கூட்டத்தில் டெல்லி வக்பு வாரியம், ஹரியானா வக்பு வாரியம், பஞ்சாப் வக்பு வாரியம் மற்றும் உத்தரகாண்ட் வக்பு வாரியம் ஆகியவற்றின் வாய்மொழி ஆதாரங்கள் அடங்கியிருந்தன. நாளின் இரண்டாம் பாதியில், குழுவானது, முன்னாள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் குழுவான ‘கால் ஃபார் ஜஸ்டிஸ்’ மற்றும் வக்ஃப் குத்தகைதாரர் நல சங்கம், டெல்லி ஆகியவற்றிலிருந்து வாய்மொழி ஆதாரங்களை சேகரிக்க திட்டமிடப்பட்டது.

வக்ஃப் குழு கூட்டத்தில் கடந்த சில வாரங்களாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். அக்டோபர் 14 அன்று, கர்நாடக மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் அதிகாரியும், பாஜக தலைவருமான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மீது வக்ஃப் நிலம் ஒதுக்கீடு தொடர்பாக கருத்து தெரிவித்ததை அடுத்து, பல எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment