'நாடாளுமன்ற குழுவின் ஆய்வுக்கு பின்னரே வக்பு மசோதா தாக்கல் செய்யப்பட்டது': சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிராமண பத்திரம்

நாடாளுமன்றக் குழுவால் நடத்தப்பட்ட விரிவான மற்றும் ஆழமான ஆய்வுக்கு பின்னரே வக்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்று மத்திய அரசின் பிராமண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் குழுவால் நடத்தப்பட்ட விரிவான மற்றும் ஆழமான ஆய்வுக்கு பின்னரே வக்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்று மத்திய அரசின் பிராமண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Center Affidavit

வக்பு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதன்படி இன்று (ஏப்ரல் 25) தாக்கல் செய்யப்பட்ட பிராண பத்திரத்தில், வக்பு மசோதா சட்டப்பூர்வமானது என்றும், சட்டமியற்றும் அதிகாரத்திற்குட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Waqf law valid, lawful exercise of legislative power: Centre tell SC, files affidavit to junk pleas against legislation

உச்ச நீதிமன்றத்தால் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் ஒரு தொகுதி மனுக்களுக்கு பதிலளித்த மத்திய அரசு, நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்களுக்கு ஆதரவாக அரசியலமைப்புச் சட்டத்தின் அனுமானம் இருப்பதாக வாதிட்டது. சட்டப்பிரிவு 32ன் கீழ் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருந்தாலும், அத்தகைய ஆய்வு சட்டமியற்றும் திறன் மற்றும் அடிப்படை உரிமை மீறல் தொடர்பான கேள்விகளுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றக் குழுவால் நடத்தப்பட்ட விரிவான மற்றும் ஆழமான ஆய்வுக்கு பின்னரே வக்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்று மத்திய அரசின் பிராமண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

வக்பு உரிமை கோரல் என்ற பெயரில் தனியார் மற்றும் அரசு சொத்துக்கள் இரண்டிலும் அத்துமீறல் சம்பவங்கள் நடப்பதைக் குறிப்பிட்டு, காலப்போக்கில் வக்பு விதிகள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. வரலாற்றுத் தரவுகளை மேற்கோள் காட்டி, முகலாயர்களுக்கு முந்தைய காலம் முதல் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம் வரை மொத்தம் 18,29,163.896 ஏக்கர் வக்பு நிலம் உருவாக்கப்பட்டதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில், 2013-க்குப் பிறகு மட்டும் கூடுதலாக 20,92,072.536 ஏக்கர் வக்பு சொத்துகளாகச் சேர்க்கப்பட்டன என்று கூறப்படுகிறது.

மனுதாரர்களை விமர்சித்த மத்திய அரசு, இந்தச் சட்டத்திற்கு எதிரான அவர்களின் மனுதாக்கல், நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டதை மாற்ற முயல்கிறது என்றும், இது "அனுமதிக்க முடியாதது" என்றும் கூறியது. சாத்தியமான, பாதகமான விளைவுகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"நீதித்துறை மறு ஆய்வின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது" என்று எதிர் தரப்பினர் தாக்கல் செய்த மனுவை விமர்சித்த மத்திய அரசு, வக்பு (திருத்தம்) சட்டம், 2025 அரசியலமைப்பு ரீதியாக உறுதியான சட்டமாக நிலைநிறுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியது.

waqf board bill

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: