Advertisment

போர் வீரர், கமாண்டர்: ஆளுநர்கள் நியமனப் பட்டியலில் முன்னாள் ராணுவ அதிகாரிகள்

முன்னாள் ராணுவ அதிகாரிகள் 2 பேர் எல்லைப் பகுதி மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
போர் வீரர், கமாண்டர்: ஆளுநர்கள் நியமனப் பட்டியலில் முன்னாள் ராணுவ அதிகாரிகள்

ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பல்வேறு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தும், ஏற்கனவே உள்ள ஆளுநர்களை வேறு இடங்களுக்கு மாற்றியும் உத்தரவிட்டார். அந்த வகையில் இரண்டு முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு எல்லைப் பகுதி மாநிலங்களில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேச ஆளுநராக இருந்த ஓய்வு பெற்ற பிரிகேடியர் பி. டி மிஸ்ரா லடாக் யூனியன் பிரதேசத்தின் லெப்டினன்ட்-கவர்னராகப் பொறுப்பேற்கிறார். அருணாச்சலப் பிரதேச ஆளுநராக வடக்கு பகுதி ராணுவ கமாண்டராக பணியாற்றி ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக் பதவியேற்கிறார்.

Advertisment

ஓய்வு பெற்ற பிரிகேடியர் பி.டி மிஸ்ரா

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த மிஸ்ரா, 1961 ஆம் ஆண்டு காலாட்படையின் மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் நியமிக்கப்பட்டார். 30 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்த அவர், 1962 சீன-இந்தியப் போர், 1965-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போர் மற்றும் 1971 பங்களாதேஷ் விடுதலைப் போர் ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார்.

பூஞ்ச் ​​துறையில் காலாட்படை பட்டாலியன் மற்றும் இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையின் (IPKF) காலாட்படை பிரிவுக்கு தளபதியாக செயல்பட்டவர். மேலும், யாழ்ப்பாணப் போருக்குப் பின்னர் 1987 முதல் 1988 வரை நடந்த பவன் போரில் விடுதலைப் புலிகளுடன் போரிட்டார்.

1993-ம் ஆண்டு அமிர்தசரஸில் உள்ள ராஜா சான்சி விமானநிலையத்தில் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இருந்து 126 பயணிகள், 9 குழந்தைகள் மற்றும் 6 பணியாளர்களை பத்திரமாக மீட்டார். இந்த ஆப்ரேஷனுக்கு ஒரு படை பிரிவுக்கு மிஸ்ரா தளபதியாக செயல்பட்டார். இதற்காக அப்போதைய பிரதமரின் பாராட்டுகளைப் பெற்றார். இவர் 1995-இல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். கார்கில் போர் வெடித்தபோது அவர் போராட முன்வந்தார்.

அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவர். அங்கு அவர் முறையே MA மற்றும் MSc பட்டங்களைப் பெற்றார். மிஸ்ரா குவாலியரில் உள்ள ஜிவாஜி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். எம்பியில் உள்ள மோவ் கண்டோன்மென்ட்டில் உள்ள காம்பாட் கல்லூரியிலும், தமிழ்நாட்டின் வெலிங்டன் கன்டோன்மென்ட்டில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியிலும் பணிரிந்துள்ளார். பின்னர் 2017-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி அருணாச்சலப் பிரதேச ஆளுநராக பதவியேற்றார்.

ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கே.டி பர்நாயக்

பர்நாயக் 40 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றியவர், அவர் ராணுவத்தில் பணியாற்றியபோது சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனைகள் தொடர்பாக பல முக்கிய சந்திப்புகளை நடத்தினார். அவர் உதய்பூரில் 2 ராஜ்புதானா ரைபிள்ஸ் மற்றும் ஆபரேஷன் பராக்ரம் (2001-'02 இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் காலாட்படை படைப்பிரிவு மற்றும் சிக்கி மலைப் பகுதி படைக்கும் தலைமை தாங்கியவர்.

அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராக பர்நாயக்கின் நியமனம், எல்லையில் சீனாவுடன் பதற்றம் நிலவும் நேரத்தில் வருகிறது. முன்னோக்கு திட்டமிடல் பிரிவிலும் பர்நாயக் முக்கிய தலைவராக பணியாற்றியுள்ளார். ராணுவ செயல்பாடுகளை நன்கு அறிந்தவர். அவர் வடகிழக்கில் உள்ள பூட்டானில் உள்ள இந்திய ராணுவப் பயிற்சிக் குழுவிற்கு (IMTRAT) தலைமை தாங்கியவர். இந்திய ராணுவ அகாடமி, IMTRAT மற்றும் Mhow, ராணுவப் பயிற்சி கல்லூரிகளில் பணியாற்றியவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Indian Army
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment