தர்ணாவில் ஈடுபட்டதற்காக வர்தா பல்கலைக்கழகத்தில் ஆறு மாணவர்கள் நீக்கப்பட்டனர். இது சம்பந்தமான கடிதத்தை ரத்து செய்யுமாறு மகாத்மா காந்தி அந்தராஷ்டிரியா இந்தி விஸ்வவித்யாலயா (எம்ஜிஏஎச்வி)-வுக்கு வார்தா மாவட்ட கலெக்டர் விவேக் பீமன்வர் உத்தரவிட்டுள்ளார்.
Advertisment
பல்கலைக்கழகம் தனது சொந்த விதிகளின் கீழ் மாணவர்களுக்கு எதிராக செயல்பட சுதந்திரமாக உள்ளது, ஆனால் (மாடல் கோட் ஆஃப் கண்டக்ட்) எம்.சி.சி-யை மேற்கோள் காட்ட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார் பீமன்வார்.
மகாராஷ்டிராவின் தலைமை தேர்தல் அதிகாரி பல்தேவ் சிங் தி சண்டே, எம்.சி.சி வளாகத்துக்குள் பொருந்தாது என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். "எம்.சி.சி.க்கு அழைப்பு விடுக்க பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லை. மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது. வளாகத்தில் நடக்கும் எந்தவொரு செயலுக்கும் எங்கள் தரப்பில் எந்தத் தடையும் இல்லை” என்றார்.
மோடி – ஜின்பிங் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
கலெக்டரிடமிருந்து தகவல் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. "நாங்கள் அதைப் பெற்றவுடன் தேவையானதைச் செய்வோம்" என்று பதிவாளர் காதர் நவாஸ் கான் கூறியுள்ளார். இருப்பினும், மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்வதை அவர் நிராகரித்தார், "வளாகத்தில் நடந்த இந்த பிரச்னை ஒழுக்கத்தை மீறுவதாகும்" என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.
“2019 சட்டமன்றத் தேர்தல் விதிகளை மீறியதற்காக மற்றும் நீதித்துறை செயல்பாட்டில் தலையிட்டதற்காக” மாணவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 9 ம் தேதி தர்ணாவை ஏற்பாடு செய்ததற்காக, மாணவர்கள் வெளியேற்றப்பட்ட கடிதங்கள் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் சனிக்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.
கொலை சம்பவங்கள், பாலியல் பலாத்கார குற்றவாளிகளைக் காப்பாற்றுதல், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்தல், மற்றும் பேச்சு சுதந்திரத்தைத் தடுத்து நிறுத்துவது போன்ற சமூக பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடிக்கு மாணவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். நீக்கப்பட்டுள்ள 6 மாணவர்களில் 3 பேர் தலித், மற்ற மூவர் ஓ.பி.சி