வைரலாகும் வீடியோ: கணவனை தாக்கும் கும்பலை அடித்து துரத்திய வீர மனைவி!

சினிமாவில் வரும் ஹிரோவைப் போல் அவரது மனைவி வந்து நிற்கிறார்.

ஹரியானாவில் பெண் ஒருவர், தனது கணவனை தாக்கும் 5 பேர் கொண்ட கும்பலை தனியொரு பெண்ணாக நின்று அடித்து விரட்டும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்கார்பு கலைகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று. அதற்கேற்ப இந்த தலைமுறை பெற்றோர்களும் தங்கள் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை கராத்தே, பாக்ஸிங் போன்ற தற்கார்ப்பு கலைகளின் பயிற்சி வகுப்புகளில் சேர்த்து விட்டு அவர்களுக்கு துணையாக நிற்கின்றன. பெண்கள் சார்ந்த விளம்பரங்களில் கூட இதுப் போன்ற காட்சிகள் காட்டப்படுகின்றன.

இந்நிலையில், ஹரியானாவில் பெண் ஒருவர், வெறும் கம்பைக் கொண்டு தனது, கணவனை மர்ம கும்பலிடன் இருந்து காப்பாற்றும் வீடியோ பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. ஹரியானா மாநிலம், யமுனா நகரின் காட்டுப்பகுதியில், 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, ஒரு நபரை சரமாரியாக தாக்குகிறது. இதனை சமாளிக்க முடியாத அவர் கீழே புரண்டிய படி கத்தி கூச்சலிடுகிறார்.

அப்போது, நீள கம்பை எடுத்துக் கொண்டு, சினிமாவில் வரும் ஹிரோவைப் போல் அவரது மனைவி வந்து நிற்கிறார். பின்பு, கணவனை தாக்கும் கும்பலை அடித்து விரட்டுகிறார். அந்த ,கும்பல் திரும்பி அந்த பெண்ணை தாக்கினாலும், விடாலம் போராடி தனது கணவனை காப்பாற்றுகிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அத்துடன், எதிரிகளிடம் இருந்து தனது கணவனை காப்பாற்றிய வீர பெண்ணிற்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்களும்  குவிந்து வருகிறது.

 

×Close
×Close