தொடர்ந்து குழந்தை பெற்றதால் கேலி செய்த அக்கம் பக்கத்தினர்: அவமானத்தில் கைக்குழந்தையை விட்டு சென்ற தந்தை!

தேவாலையத்தில் குழந்தையை விட முடிவு செய்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

கேரளாவில் இளம் தம்பதினர் பச்சிளம் குழந்தையை துடிக்க  துடிக்க  தேவாலயத்தில் விட்டு செல்லும் வீடியோ காண்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.

குழந்தை செல்வம் என்பது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கிடைப்பதில்லை.  தாய் சேய் மருத்துவமனைக்கு சென்று பார்த்தால் தெரியும்.  கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாததால் , மருத்துவரின் உதவியை நாடி வரும் பெற்றோர்களின் நிலை எப்படி இருக்கிறது என்பதை.

ஆனால். கேரளாவில் இளம் தம்பதியினர்  தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொண்டதை அக்கம் பக்கத்தினர் கிண்டல் செய்கின்றனர் என்பதற்காக, பிறந்த குழந்தையை துடிக்க துடிக்க தேவாலயத்தில் விட்டு சென்றுள்ளனர்.

திருச்சூர் மாவட்டம் எடப்பள்ளியைச் சேர்ந்த பிட்டோ, பிரபிதா  தம்பதியனருக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் பிரபிதா 4 ஆவது முறையாக கர்பமாகியுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தினர் அந்த தம்பதினரை கிண்டல் செய்துள்ளனர்.

இந்த அவமானத்தில் மனம் உடைந்த அவர்கள், 4 ஆவது பிறந்த குழந்தையை   தேவலாயத்தில் விட முடிவு செய்துள்ளனர். இதன்படி, கடந்த 3ஆம் தேதி   இரவில் யாரும் இல்லாத நேரத்தில் எடப்பள்ளி பகுதியில் உள்ள புனித ஜார்ஜ் ஃபோரேன் தேவாலையத்தில் குழந்தையை விட முடிவு செய்து புறப்பட்டு சென்றுள்ளனர்.

திட்டமிட்டப்படி, குழந்தையின் தந்தை  பிட்டோ தேவாலையத்தில் நெற்றியில் முத்தமிட்டு குழந்தையை விட்டு சென்றார்.. சிறிது நேரம்  கழித்து குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிவந்த தேவலாய பாதுகாவலர்கள் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்பு, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். ஆலயக்த்தில் இருந்த சிசிடிவி கேமிராவில்  நடந்த சம்பவங்கள் அனைத்தும் பதிவாகி இருந்தனர். இந்த வீடியோவின் உதவி மூலம் குழந்தையின் பெற்றோரான பிட்டோ மற்றும் அவரது மனைவி பிரபிதா ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் காவல் துறையினரிடம் அளித்த வாக்மூலம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. “நாங்கள் ஒன்றும்  விரும்பி எங்களின் குழந்தையை தேவாலயத்தில் விடவில்லை. அக்கம் பக்கத்தினர் கேலியும், கிண்டலும் செய்ததால் தான் இப்படி செய்தோம்’ என்று அழுதப்படி கூறியுள்ளனர்.

குழந்தையை கீழே விடும் முன், குழந்தைக்கு பிட்டோ முத்தமிட்டு அதை பத்திரமாக விட்டுச் செல்லும் சிசிடிவி காட்சி காண்போர் நெஞ்சை கலங்கச் செய்கிறது.

×Close
×Close