scorecardresearch

ஜி20 தலைவர் பதவியை ஏற்ற இந்தியா; மோடி பொறுப்பேற்கும் வீடியோ

ஜி20 தலைவர் பதவியை ஏற்றுக் கொண்ட இந்தியா; பிரதமர் மோடியிடம் பொறுப்பை ஒப்படைத்தார் இந்தோனேசிய அதிபர்; வீடியோ

ஜி20 தலைவர் பதவியை ஏற்ற இந்தியா; மோடி பொறுப்பேற்கும் வீடியோ

பாலியில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டு நாள் உலகத் தலைவர்களின் ஜி 20 உச்சிமாநாடு நிறைவடைந்த நிலையில், ஜி 20 தலைவர் பதவியை பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் ஒப்படைத்தார்.

20 முக்கிய பொருளாதார நாடுகளின் குழு ஒரு கூட்டு பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது மற்றும் பிற கூட்டாண்மைகளை உருவாக்கியது என இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தனது இறுதிக் கருத்துக்களில் கூறினார். பின்னர், பிரதமர் மோடிக்கு தலைவர் பதவியை ஒப்படைத்தார். டிசம்பர் 1ஆம் தேதி முதல் இந்தியா அதிகாரப்பூர்வமாக தலைவர் பதவியேற்கவுள்ளது.

இதையும் படியுங்கள்: உ.பி., பீகாரில் புதிய சமூக கூட்டணிக்கு முயற்சி; ஈ.பி.சி, பாஸ்மாண்டா முஸ்லீம்களை நெருங்கும் பா.ஜ.க

ஜி20 தலைவர் பதவியில் இந்தியா பொறுப்பேற்பது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் என்று பிரதமர் மோடி கூறினார். “ஒவ்வொரு நாடுகளின் முயற்சிகளுடனும் சேர்ந்து, G20 உச்சிமாநாட்டை உலக நலனுக்கான ஊக்கியாக நாம் மாற்ற முடியும்,” என்று அவர் கூறினார்.

வெளியுறவுத்துறைச் செயலாளர் வினய் குவாத்ரா, ஜி 20 ‘விளைவு ஆவணத்தை’ உருவாக்குவதற்கு இந்தியா ‘ஆக்கப்பூர்வமாக’ பங்களித்துள்ளது என்று கூறினார்.

அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஆகியவற்றை உள்ளடக்கியது ஜி20 அமைப்பாகும். உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதத்திற்கும் மேலாக, சர்வதேச வர்த்தகத்தில் 75 சதவீதத்திற்கும், உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அவை ஒன்றாக உள்ளன.

சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் மூன்று நாள் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர்.

தனது பாலி பயணத்திற்கு முன்னதாக, பிரதமர் மோடி, இந்தியாவின் ஜி20 தலைவர் பதவியானது ‘வசுதைவ குடும்பம்’ அல்லது ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற கருப்பொருளில் அமையும் என்று கூறியிருந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Watch pm modi takes over g20 presidency from indonesia