/tamil-ie/media/media_files/uploads/2022/09/Murmu-2.jpg)
ஜனாதிபதி திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்குச் சென்று செப்டம்பர் 8ஆம் தேதி காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தினார்.
வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் திங்கட்கிழமை அரசு இறுதிச் சடங்கு நடைபெறும் வரை, பிரிட்டனின் நீண்ட காலம் பதவியில் இருந்த ராணி, மண்டபத்தில் படுத்த நிலையில் இருந்தார். திரௌபதி முர்மு இந்திய மக்கள் சார்பாக ராணிக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதையும் படியுங்கள்: தலைவர் பதவி பொருட்டல்ல; கட்சியில் ராகுலுக்கு எப்போதும் முதன்மையான இடம் உண்டு – ப.சிதம்பரம்
#WATCH | President Droupadi Murmu visited Westminster Hall London where the body of Queen Elizabeth II is lying in state. The President offered tributes to the departed soul on her own behalf and on behalf of the people of India. pic.twitter.com/TID5Wlm4ux
— ANI (@ANI) September 18, 2022
மூன்று நாள் பயணமாக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு, ஞாயிற்றுக்கிழமை இந்திய அரசின் சார்பில் இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார். செப்டம்பர் 8 ஆம் தேதி ஸ்காட்லாந்தில் 96 வயதில் இறந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் நினைவாக இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட உலகத் தலைவர்களும் அங்கு வருகை தந்து வருகின்றனர். லண்டனில் உள்ள லான்காஸ்டர் ஹவுஸில் தற்காலிக தூதர் சுஜித் கோஷ் அவர்களுடன் ஜனாதிபதி இணைந்து கொண்டார்.
சனிக்கிழமை மாலை வந்த ஜனாதிபதி, அபேயில் உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்குத் தொடங்கி ஒரு மணி நேரத்திற்குப் பிறகு இரண்டு நிமிட மௌனத்துடன் முடிவடையும் ஒரு சோகமான விழாவில் சுமார் 500 உலகத் தலைவர்கள் மற்றும் உலகளாவிய அரச குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 2,000 பேருடன் திரௌபதி முர்முவும் கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திங்கட்கிழமை இறுதிச் சடங்குகளுக்கு முன்னதாக, பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி துணைவியார் கமிலா வழங்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி அழைக்கப்பட்டார். "அதிகாரப்பூர்வ அரசு நிகழ்வு" என்று விவரிக்கப்படும் நிகழ்ச்சியில் அனைத்து நாடுகளின் தலைவர்கள், அரசு மற்றும் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு விருந்தினர்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
கூடுதல் தகவல்கள் : PTI
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.