கர்நாடக சட்டமன்ற தேர்தலின் பரப்புரையின் ஒருபகுதியாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “பெங்களூருவில் டெலிவரி தொழிலாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர்களின் வேலை நேரம் வரையறை செய்யப்படும், அவர்களுக்கு நல்வாழ்வு வாரியம் அமைக்கப்படும் உள்ளிட்ட கோரிக்கைகளை வழங்கினார்.
இதனை காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையிலும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ராகுலின் சந்திப்பு குறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில், “அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் ராகுல் காந்தி கேட்கிறார் ” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக ராகுல் காந்தி மசாலா தோசையும் பகிர்ந்துக்கொண்டார்.
கர்நாடக சட்டப்பேரவைக்கு ஏப்.10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.
இங்கு ஆளும் பாரதிய ஜனதா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“